நடுரோட்டில் ராதிகாவின் கையைப் பிடித்து கெஞ்சம் கோபி.! ராதிகா திருமணத்திற்கு ஒப்புக்கொள்வாரா.? விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்கள் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.மேலும் தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்பொழுது பாக்யா மற்றும் கோபி இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது.

மேலும் பாக்யா இந்த வீடு கட்டியதற்கான 40 லட்ச ரூபாய் பணத்தை ஒரு வருடத்திற்குள் தந்து விடுவதாக கூறி கோபியை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். மேலும் கோபி நேராக ராதிகாவின் வீட்டிற்கு சென்றுன் என்னை வீட்டை விட்டு அனுப்பி விட்டார்கள் உன்னை தான் நம்பி இருக்கிறேன் என கூறினார் பிறகு ராதிகாவின் வீட்டிற்கு கோபியின் அப்பா, அம்மா ஆகியோர்கள் வந்து ராதிகாவை திட்டி விட்டு செல்கிறார்கள்.

இதனால் தப்பு செய்யாத பொழுதே இவ்வாறு ராதிகாவை திட்டுவதால் கோபியை ஏற்றுக் கொள்ளலாம் என்று முடிவில் இருக்கிறார். மேலும் கோபி தற்பொழுது ஹோட்டலில் தங்கி வருகிறார் இதனைப் பார்த்த ராதிகா என்னால் தான் இப்படி கோபி கஷ்டப்படுகிறார் என மனதிற்குள் நினைத்து வருத்தப்படுகிறார். பிறகு ரோட்டில் நின்று கொண்டு வழக்கம் போல் ராதிகாவின் கையை கோபி பிடித்துக் கொண்டு கல்யாணம் பற்றி பேசுகிறார்.

ராதிகாவும் அமைதியாக அப்படியே நின்று கொண்டு அவர் சொல்வதைக் கேட்கிறார் இந்த நேரத்தில் இதனை பாக்கியா ஸ்கூட்டியில் வரும் பொழுது பார்க்க பிறகு ராதிகா மற்றும் கோபியை மீது கோபத்தில் இருக்கிறார் நடுரோட்டில் நின்று இப்படியெல்லாமா செய்வார்கள் என கோபத்தில் இருந்து வரும் நிலையில் மேலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும் மேலும் கோபியின் இப்படிப்பட்ட நிலைமையை பார்த்து ராதிகா மிகவும் வருத்தமடைகிறார் ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் அவரின் மனசை மாற்ற நினைக்கிறார்கள்.