இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பாக்கியா.! நடைபிணமாக வாழும் கோபி..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் தற்பொழுது கோபி மற்றும் பாக்யா இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது மேலும் அதற்காக 40 லட்சத்தை ஒரு வருடத்திற்குள் கோபிக்கு தருவதாக கூறிவிட்டு கோபி வீட்டை விட்டு வெளியே ஏற்றிவிட்டார் பாக்யா.

இதனால் கோபி எங்கு போவது என்று தெரியாமல் காரிலேயே தங்கியிருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய கல்லூரி காதலியான ராதிகாவை தன்னை விரைவில் வீட்டிற்குள் சேர்த்துக் கொள்வார் என நம்பி இருக்கிறார். இவ்வாறு பாக்கியா தான் கோபியை வீட்டை விட்டு வெளியேற்றினார் என்பதால் செழியன், ஈஸ்வரி, இனியா என அனைவரும் பாக்யாவின் மீது வெறுப்பு காமித்து வருகிறார்கள்.

அது மட்டுமின்றி செழியன் மாமியார் மரியம் வீட்டிற்கு வந்து கோபி மற்றும் பாக்கியா இருவருக்கும் ஏன் விவாகரத்து ஆனது என கேட்கிறார் ஆனால் இதனை மருமகள் ஜெசி ஏதோ சொல்லி அவரின் வாயை அடைத்து விடுகிறார் இருப்பினும் அந்த நேரத்தில் சரி எனக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறார் இதனால் பாக்யாவை கண்டபடி திட்டுகிறார்.

செழியன் வீட்டில் சாப்பிடாமல் தன்னுடைய கோபத்தை காட்டுகிறார் மேலும் இனியாவும் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய நாள் முடியும் தருணத்தில் வந்து பாக்யாவிடம் தனது பணம் கட்ட வேண்டும் என கூறுகிறார் எனவே பாக்கியம் நாளைய தினமே உன்னுடைய பள்ளிக்கு வந்து பணத்தை கட்டி விடுகிறேன் என சொல்கிறார்.

மேலும் பாக்யாவின் மாமனார் பண உதவி ஏதாவது வேண்டுமா என கேட்கிறார் அதற்கு உடனே மாமியார் கோபியை வீட்டை விட்டு வெளியேறியதை மனதில் வைத்துக் கொண்டு வாழ்ந்து காட்டுவேன் வாழை மரத்தை வெட்டுவேன் என வசனம் பேசிய நீயே எல்லாவற்றையும் சமாளி என கடுமையாக திட்டி விடுகிறார். இவ்வாறு கோபி செய்த தவறை அனைவரும் மறந்து விட்டு பாக்யாவை தினம் தினம் பிள்ளைகள் முதல் மாமியாவரை அனைவரும் கொடுமை செய்து வருகிறார்கள்.