ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியே போ முதல்ல என அசிங்கப்படுத்தி ராதிகா.! விறுவிறுப்பான எபிசோட்களுடன் பாக்கியலட்சுமி..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி தற்பொழுது கோபி மற்றும் பாக்கியா இருவருக்கும் விவாகரத்து ஆகியுள்ள நிலையில் கோபி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் மேலும் இந்த வீட்டை கட்டியதற்கு 40 லட்ச ரூபாய் ஆன நிலையில் அந்த பணத்தை ஒரு வருடத்திற்குள் தந்து விடுவதாக கோபியிடம் பாக்கியா சபதம் போட்டுள்ளார்.

மேலும் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவின் வீட்டிற்கு சென்று நான் உனக்காக தான் விவாகரத்து செய்யும் முடிவை எடுத்தேன் தற்பொழுது என்னை வீட்டை விட்டு அனைவரும் வெளியில் அனுப்பி விட்டார்கள் எங்கு போகிறது என்று தெரியாமல் காரில் சுற்றி வருகிறேன் நீ தான் என்னுடைய கடைசி நம்பிக்கை நீயும் என்னை வேண்டாம் என கூறி விட்டால் நான் செத்து விடுவேன் என கூறுகிறார்.

பிறகு இவர் ராதிகாவின் வீட்டை விட்டு வெளியேற அதனை கோபியின் அப்பா ராமமூர்த்தி பார்த்துவிடுகிறார் பிறகு அவர் ராதிகாவை மிகவும் தவறாக பேச ராதிகாவின் அண்ணன் உங்கள் மகனின் இங்கு வருகிறார் எதா இருந்தாலும் அவரிடம் போய் பேசிகொொங்க அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.

பிறகு இதனை தொடர்ந்து கோபியின் அம்மா ஈஸ்வரி வருகிறார் உன்னால் தான் எங்களுடைய குடும்பம் இப்படி ஆனது நீலா நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிடுவே என்ன சாபம் விட இதனைக் கேட்ட ராதிகா சும்மா வாய மூடுங்க உங்களுக்கு நடந்தது என்னன்னு தெரியாம பேசிக்கிட்டு இருக்காதீங்க வீட்டை விட்டு முதல்ல வெளில போங்க என அசிங்கப்படுத்தி அனுப்புகிறார்.

இதன் காரணமாக தொடர்ந்து அனைவரும் ராதிகாவை தவறாக பேசி வருவதால் ராதிகா கோபியுடன் வாழ முடிவு எடுக்கப் போகிறார் பிறகு அனைவருக்கும் வில்லியாக நடிக்கப் போகிறார் என்பது தெரிய வருகிறது. இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.