விவாகரத்து கொடுக்க தயாரான பாக்யாவிடம் குடும்பத்தினர்கள் கோரிக்கை.! கோபி எடுத்த முடிவு.. பாக்கிய லட்சமி சீரியல் இன்றைய எபிசோட்.

Baakiyalakshmi-gopi-1
Baakiyalakshmi-gopi-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் பாக்யா கோர்ட்டில் இருந்து வந்த டிவோர்ஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு உள்ளே வருகிறார்.

இது என்ன என கேட்டதற்கு கோர்ட்டில் இருந்து வந்த டிவோர்ஸ் இன்னைக்கு கோர்ட்டுக்கு போகணும் போல என கூறுகிறார்.அதெல்லாம் ஒன்னும் போக வேண்டாம் என ஈஸ்வரி சொல்கிறார் மேலும் அந்த நோட்டீசை கிழித்து போட சொல்கிறார் செழியன் மற்றும் இனியா என எல்லோரும் அதெல்லாம் ஒன்றும் போக வேண்டாம் அதுக்கு போகணும்னு அவசியம் இல்லை என கூறி வருகிறார்கள்.

இல்ல அத்தை அவர் கேட்டாருல்ல ஆசைப்பட்டு கேட்டார் அதை கொடுக்க வேண்டும் அது என்னோட கடமை என கூறுகிறார். கோபி எல்லாத்தையும் மறந்துட்டு இந்த வாழ்க்கையில வாழனும் உன் கிட்ட சொன்னேன் தானே பிறகு உன்கிட்ட வந்து கெஞ்சி மன்னிப்பு கேட்டான் தானே என கேட்கிறார் ஈஸ்வரி.

பிறகு நக்கலாக எண்ணுகிட்டு நீங்க மன்னிப்பு கேட்டீங்களா என பாக்யா கோபியை பார்த்து கேட்க கோபி அப்படியே நிற்கிறார். இதனைத் தொடர்ந்து செழியன் நீங்க என்னமா சீரியல் சினிமாவில் வர பஞ்ச் டயலாக் எல்லாம்சொல்லிக்கிட்டு இருக்கீங்க என கூற வாழ்க்கையில உன்னை விட அதிக அனுபவம் எனக்கு இருக்கு இதை பத்தி நானே பேசிக்கிறேன் நீ அமைதியா இரு என கூறுகிறார் பாக்யா.

பிறகு தன்னுடைய மாமனாரிடம் நான் உங்களை எனக்கு மாமனாராக பார்க்கவில்லை என்னுடைய அப்பாவாகத்தான் பார்க்கிறேன் நான் மரியாதையோடு வாழனும்னு நினைக்கிறேன் இல்லையென்றால் செத்துப் போயிடலாம் என்னுடைய முடிவுல நீங்க குறுக்க நிக்க மாட்டிங்கனு நான் நம்புகிறேன் என கூறுகிறார்.

நான் என்னுடைய பிள்ளைகளுக்காக வாழனும்னு நினைக்கிறேன் என்ன சொல்கிறார். பிறகு ஈஸ்வரி இனி அவன் எந்த தப்பும் பண்ண மாட்டான் பிடிவாதமாக இருக்காத நான் உன்கிட்ட பேசமாட்டேன் என சொல்ல பிடிக்காத வாழ்க்கையில அவர் இருக்க சொல்லி கட்டாயப்படுத்துறீங்க என பாக்யா கேட்கிறார்.

10 மணிக்கு தானே இருக்கணும் இதில் இப்பொழுது கிளம்பினால் சரியாக இருக்குமா? என எழிலை கேட்கிறார் அதற்கு பிறகு கோபி என்ன திமிர் காட்டுகிறாயா? பழிக்கு பழியா என கேட்கிறார். இல்லை இந்த பிடிக்காத வாழ்க்கைல இருந்து விலகலாம் என முடிவெடுத்திருக்கிறேன் என பாக்யா கூறுகிறார்.இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.