50 வயதில் திருமணம் செய்துக்கொண்டு ராதிகா வீட்டில் வாழத் தொடங்கிய கோபி.! சபதத்தை நிறைவேற்ற போராடும் பாக்யா..

baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது கோபி மற்றும் பாக்யாவிற்கு விவாகரத்து தந்துள்ள நிலையில் இவர்களுக்குள் யார் வீட்டை விட்டு போவார் என்ற எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பாக்கியா கோபியை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார் ஆனால் மகள் இனியா மற்றும் ஈஸ்வரி இவருக்கும் இதில் சம்மதம் இல்லை.

இப்படிப்பட்ட நிலையில் கோபி இந்த வீடு கட்டுவதற்காக 40 லட்சம் செலவு செய்திருக்கிறேன் அந்த மொத்த பணத்தையும் என்னிடம் கொடு நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என பாக்யாவிடம் சண்டை போடுகிறார். உடனே பாக்கியா இன்னும் ஒரு வருடத்தில் உங்களுக்கு 40 லட்சம் ரூபாய் பணத்தை சம்பாதித்து தருகிறேன் என வாக்களிக்கிறார்.

எனவே கோபியும் இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என முடிவெடுத்து ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். அவ்வபொழுது ராதிகா மற்றும் அவரின் அண்ணனிடம் ராதிகாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தற்பொழுது அனாதையாக நிற்கிறேன் என கூறுகிறார்.

‘நீ தான் என்னுடைய கடைசி நம்பிக்கை நீயும் என்னை வேண்டாம் எனக் கூறிவிட்டால் நான் செத்து விடுவேன்’கூற ராதிகா கோபியிடம் எதுவும் கூறாமல் அப்படியே நிற்கிறார் மேலும் பாக்கியாவிற்கு துரோகம் செய்துவிட்டோம் என்பதையும் நினைக்கிறார். இருந்ததாலும் தற்பொழுது ராதிகா சிந்தித்தாலும் தனக்காக தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களான அனைவரையும் விட்டுவிட்டு வந்துள்ளார் எனவே இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

இதற்கு மேல் கோபி ராதிகாவின் வீட்டில் தான் வாழ இருக்கிறார் இதனைப் பற்றி பாக்கியாவிற்கு தெரிய வந்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள் திருமணம் செய்து கொண்ட 25 வருடத்தில் எந்த மரியாதையும் கொடுக்காத கோபியை பற்றி இதற்கு மேல் வருத்தப்படாமல் போட்ட சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என அதனை நோக்கி பயணிக்க உள்ளார்.