தனது வீட்டை விட்டு வெளியேறி கோபி அடுத்து செல்வது எங்கு தெரியுமா.! பரபரப்பாகும் இன்றைய எபிசொட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி சமீப காலங்களாக டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.தற்பொழுது கோபி மற்றும் ராதிகாவின் தகாத உறவைப் பற்றி பாக்கியாவிற்கு தெரியவந்துள்ள நிலையில் பாக்கியா துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் விவாகரத்தை தந்து விட்டார்.

மேலும் இவர் துணிகளை எடுத்துக் கொண்டு கீழே வரும் பொழுது அவருடைய மாமனார், மாமியார், மகள் என அனைவரும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என கெஞ்சுகிறார்கள். அந்த நேரத்தில் கோபியின் அப்பா எல்லா தப்பையும் பண்ணுனது கோபி தான் அவன்தான் இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் எனக் கூறுகிறார். இதனை கேட்டவுடன் கோபி இந்த வீட்டிற்க்காக 40 லட்சம் செலவழித்து இருக்கிறேன் மிஷின் மாதிரி இந்த குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தேவையானதை பூர்த்தி செய்வதற்காக தினமும் 12 மணி நேரம் உழைத்திருக்கிறேன்.

இதுவும் பத்தாததுக்கு ஏடிஎம் மெஷின் பணம் கொடுத்தது போல பாசத்தையும் கொடுக்க வேண்டுமா என மிகவும் மோசமாக திட்டி வருகிறார். இதற்கு எழில் எதற்காகவும் இவர்களிடம் அம்மா நியாயப்படுத்த வேண்டாம் என பாக்யாவை வீட்டை விட்டு போகலாம் என கூப்பிடுகிறார். பிறகு பாக்கியா இனியாவிடம் உனக்கு அம்மா வேணுமா அப்பா வேணுமா என கேட்கிறார் அதற்கு இனியா நீங்கள் பிரிந்து இருந்தாலும் இருவரும் ஒரே வீட்டில் இருங்கள் எனக்கு ரெண்டு பேரும் தான் வேண்டும் எனக் கூறுகிறார்.

அதன் பிறகு கோபிக்கு பேசிக் கொண்டிருக்கும் பொழுது கோபம் வந்ததால் பாக்யாவின் கையில் இருந்த பெட்டியை தூக்கி வெளியே வீசுகிறார். அதிலிருந்து கோபியின் துணிமணிகள் இருப்பதை பார்த்து கோபி ஆத்திரத்தில் பாக்யாவை அடிப்பதற்காக செல்கிறார்.

உடனே கோபியின் மாமனார் அவரை தடுக்கிறார் இவ்வாறு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாக்யாவிற்கு சப்போர்ட்டாக இருந்து வரும் நிலையில் வேறு வழியில்லாமல் கோபி வீட்டை விட்டு வெளியேறுகிறார் மேலும் இதனை காரணமாக வைத்து ராதிகாவின் வீட்டிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.