பெட்டியில் கோபியின் துணியை வைத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பிய பாக்யா.! கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய கோபியின் அப்பா..

baakiya-lakshmi-01
baakiya-lakshmi-01

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பேரக்குழந்தை பார்க்க போகும் நேரத்தில் தனது கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் இருந்து வருகிறார் கோபி. 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்த மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் இவ்வாறு அனைத்து தவறுகளையும் கோபி செய்துள்ள நிலையில் கடைசியில் பாக்யாவின் மீது அனைத்து பழிகளையும் தூக்கிப் போடுவதோடு மட்டுமல்லாமல் அவரின் வீட்டில் இருக்க எந்த உரிமையும் இல்லை வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என கூறுகிறார்.அதோடு அவதூறான பல பழிகளை பாக்யாவின் மீது போட்டு வருகிறார் இவ்வாறு விவாகரத்து ஆனதற்கு பிறகு பாக்யா கோபியிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே அமைதியாக இருந்து வருகிறார்.

பிறகு மாடிக்குச் சென்று ஒரு பெட்டியில் தன்னுடைய துணிகளுடன் கீழே இறங்குகிறார் இவ்வாறு இதனை பார்த்த அனைவரும் இவர் பெட்டியை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் செல்கிறார் என்று அனைவரும் அதிர்ச்சியடைந்து வந்தார்கள்.ஆனால் அந்த துணிப்பை தூக்கி போட அதில் கோவியின் துணிகள் இருக்கிறது பண்ற தப்பு எல்லாம் ஆம்பளைங்க பண்ணிட்டு பொம்பளைங்களை தண்டனைக்கு அனுபவிக்க சொல்லுவீர்களா என ருத்ரதாண்டவம் ஆடும் பாக்கியா கோபியை வீட்டை விட்டு வெளியே போ என விரட்டுகிறார்.

இதற்கு கோபியின் அப்பாவும் ஒத்துழைப்பு கொடுக்கிறார் கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார் ரொம்ப திமிரா ஏறிடுச்சா பாக்யா என கோபி பாக்யாவை திட்டினாலும் குடும்பமே பாக்கியவருக்கு துணை இருக்கின்றது. ஏனென்றால் வேறு வழி இல்லை அனைத்து தப்புகளும் கோபியின் மீது தான் இதன் காரணமாக வேறு வழி இல்லாமல் கோபி பெட்டியை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இவ்வாறு அவதூறாக பேசி பாக்கியாவை விட்டு வெளியே போ என கூறிய கோபியை அதிரடியாக வீட்டை விட்டு அனுப்பியது ரசிகர்கள் மத்தியில் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இவ்வாறு பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக இருக்கிறது. கண்டிப்பாக கோபி ராதிகாவின் வீட்டிற்கு தான் செல்வார் இதை வைத்து சிம்பதி உருவாக்குவார் என்பதை தெரிந்ததே.