தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் கோபி வீட்டில் எல்லோரும் பாக்கியா பற்றி பேசிக் கொண்டிருக்க அப்பொழுது கோபி இனி அவ எதுக்கு இந்த வீட்ல வரப்போற அப்படியே வந்தாலும் அவளை உள்ள விடமாட்டேன் எனக்கூறி சத்தம் போட்டு இருக்கும் நேரத்தில் பாக்யா பைக்கில் வருகிறார்.
பிறகு பாக்கியா வீட்டிற்கு உள்ளே வர முயன்ற போது கோபி நில்லு என தடுத்து நிறுத்த அதை மீறி பாக்யா உள்ளே வருகிறார்.பாக்யாவிடம் போய் ஈஸ்வரி, செழியன் என அனைவரும் அவரிடம் பாக்யா செய்தது தான் தப்பு என்பது போல் பேசி வருகிறார்கள். கோபி பண்ணது தப்புதான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா அவன் அவனுடைய தப்ப ஒத்துக்கிட்டேன் இனிமே இப்படி பண்ண மாட்டேன் இதுக்கு அப்புறம் ஒரு ஆம்பள என்ன பண்ண முடியும் அதுக்கு.
அதுக்கப்புறம் நீ போய் விவாகரத்து வாங்கிட்டு வரேன்னா அதுக்கு என்ன அர்த்தம் நீயும் அவன் எப்போ விவாகரத்து கொடுப்பான காத்துகிட்டு இருந்தியா என ஈஸ்வரி கேட்கிறார்.மேலும் கோபியை இதுக்கப்புறம் அதே தப்பு பண்ணா நான் அவனை செருப்பால அடிப்பேன் என சொல்ல கோபி அதிர்ச்சியடைகிறார். இதனைத் தொடர்ந்து செழியன் அப்பா பண்ணது தப்புதான். ஆனா நீங்க இவ்வளவு நாளா விவாகரத்து வேணும் விஷயத்தை மனசுல வச்சு இன்னிக்கு நிறைவேத்திக்கிட்டு இருக்கீங்க என சொல்ல இதையெல்லாம் கேட்க பாக்யா வருத்தம் அடைகிறார் கோபி இன்னும் எதுக்கு இந்த வீட்டில் நிக்கிற என இந்த வீட்டை விட்டு வெளியே போ எனக் கூறுகிறார் .
உடனே எழில் என்ன அப்பா உங்க வீடுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க என கேட்க ஆமா முழுக்க முழுக்க இது என் உழைப்பால் உருவான வீடு என் ரத்தத்தை சிந்தி இந்த வீட்டை கட்டி இருக்கேன் என்ன சொல்ல சும்மா பணத்தை போட்டு கட்டிட்டா அது வீடு கிடையாது அதுக்கு பேரு கட்டிடம் அதுல சந்தோஷமா குடும்பம் வாழனும் அதுக்கு பேரு தான் வீடு அப்படி ஒரு வீட்டை உருவாக்கியது எங்க அம்மா தான் சும்மா நான் கட்டின வீடு நான் கட்டின வீடுன்னு சொல்லி இதுல இருக்க எல்லோருக்கும் உங்களுக்கு விசுவாசம் இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க என கோபிக்கு பதிலடி கொடுக்கிறார்.
பிறகு பாக்கியா எழிலை அமைதியாக இருக்குமாறு கூறுகிறார் அதன் பிறகு கோபி அதான் இந்த வீட்டுக்கு வந்து டைவர்ஸ் கிடைச்சுச்சுன்னு சீன் போட வந்தல கிளம்பு என சத்தம் போடுகிறார் பாக்யா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.