குடும்பத்தினர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சிக்கொடுத்த பாக்யா.! மகிழ்ச்சியில் கோபி.. எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. கடந்த சில வாரங்களாகவே சன் டிவியின் சீரியல் டிஆர்பி-யில் முன்னணியில் இருந்து வந்த நிலையில் அதனை முறியடித்து தற்பொழுது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி-யில் ஒரே வாரத்தில் முன்னிலை வகித்து.

இதற்கு முக்கிய காரணம் பற்றி பாக்கியாவிற்கு தெரிய வந்துள்ள நிலையில் தற்போது பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி தனது குடோனில் தங்கி வருகிறார்.இனியா, ஈஸ்வரி என அனைவரும் வீட்டிற்கு பாக்கியவை அழைத்தும் பாக்யா வீட்டிற்கு வராமல் இருந்து வந்த நிலையில் தற்போது எழிலை அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள் மேலும் இனியா பாக்யாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். மேலும் கோபியின் ரூமுக்கு செல்கிறார் பாக்யாவை பார்த்ததும் கோபி அதிர்ச்சியடைகிறார் பிறகு கோபி வெளியில் வந்துவிட பாக்யா குளித்து கிளம்பி விட்டு மிகவும் அழகாக வருகிறார்.

ஈஸ்வரி கோபியிடம் பாக்கியா கோவிலுக்கு போகணும் போல அதனாலதான் கிளம்பி வந்துருக்கா அழைச்சிட்டு போயிட்டு வாடா என கூறுகிறார் பிறகு கோபியின் அப்பா ஈஸ்வரியை சும்மா இரு அவ கோவிலுக்கு போற நிலைமை தான் இருக்கிறாளா பர்ஸ்ட் கேளு எனக் கூற பிறகு புருஷன் பொண்டாட்டிக்கு உள்ள இந்த பிரச்சனை எல்லாம் சாதாரணம் கோவிலுக்கு போயிட்டு வா கோபி என கூறுகிறார்.

பிறகு பாக்கியா ஈஸ்வரி இடம் என்னை மன்னித்து விடுங்கள் அத்த எனக் கூறிவிட்டு இந்த நோட்டீஸ் வந்து இருக்குல்ல போ வேணாமா இன்னைக்கு தான் கோர்ட்டுக்கு போக வேண்டும் அவர் கேட்டதை நாம கொடுக்கணும் எனக் கூறுகிறார் எனவே அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். இவ்வாறு இதற்கு மேல் கோபியை நினைத்தது நடக்க இருப்பதால் இது கோபி மிகவும் மகிழ்ச்சியாக ராதிகாவுடன் இருப்பான் என எதிர்பார்க்கப்படுகிறது.