அம்மாவை பார்க்க வேண்டும் என கதறி அழுத இனியா.. பாகியா எடுக்கும்.! அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

baakiya-lakshmi-serial-15
baakiya-lakshmi-serial-15

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகத்தின் இன்றைய எபிசோட்டில் கோபியின் அப்பா,அம்மா செழியன் மற்றும் ஜெனி ஆகிய அனைவரும் உட்கார்ந்து பாக்கியவை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர் அந்த தருணத்தில் பாக்கியாவின் மகளான இனியா அழுது கொண்டே படிக்கட்டில் இருந்து கீழே வருகிறார்.

இதைப் பார்த்த அனைவரும் இனியாவை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்கள் ஆனால் அவர்களால் அது இயலவில்லை, இனியா அவர்களிடம் இனிமே அம்மா வர மாட்டாங்களா? எனக் அழுது கொண்டே கேட்கிறாள். உடனே அவர்கள் நீ அழாதே நாங்கள் சென்று அம்மாவை அழைத்து வருகிறோம் என கோபியின் தந்தையும் மூத்த மகனும் கிளம்பி பாக்கியாவின் வீட்டிற்கு செல்கிறார்கள்.
அங்கு சென்றதும் கோபியின் தந்தை ,எங்களுக்காக வரவில்லை இனியா அழுது கொண்டிருக்கிறாள் அவளுக்காக தான் வந்தோம், அவள் அழுவதை பார்த்தால் என்னாலையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறி நீ வீட்டிற்கு வர வேண்டும் என்கிறார், பாக்யாவின் மூத்த மகனும்,அம்மா இனியாவிற்கு என்ன தெரியும் அவள் அழுது கொண்டே இருக்கிறாள் நாங்கள் என்ன செய்வது? நீங்கள் வரவேண்டும் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்கின்றனர்.

பாக்கியாவுடன் இருக்கும் செல்வி, எனக்கு என்னமோ இனியாவ காரணம் காட்டி உங்களை செண்டிமெண்டுக்குள் தள்ளி வீட்டிற்கு கூப்பிடுகிறார்கள் என்று தோணுகிறது என்று கூறுகிறார், இதற்கு எழில் நீங்கள் கூறுவதும் சரிதான் அக்கா இந்த குற்ற உணர்ச்சியை தூண்டிவிட்டு காரியம் சாதிக்கிறதில் நம்ம ஆளுங்க பெரிய ஆளு, நம்ம ஆளுங்க அதெல்லாம் தரமா செய்வாங்க நீ ஒன்னும் இதுக்கெல்லாம் மயங்கிடாத அம்மா என்று கூறுகிறார். அப்படி எல்லாம் நீயும் பேசாதடா,இனியா இத்தனை நாளா வீட்டிலேயே இருந்த அம்மா திடீர்னு வீட்ல இல்லையேன்னு நினைச்சு அழுவுறா என்று பாக்கியா கூறுகிறார்.
இப்படி இருக்க இனியாவையும் அவர்கள் கூடையே அழைத்து வந்திருக்க வேண்டும், அப்படி உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அது அப்பா தான் செய்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் எழில், மேலும் உனக்கு என்னம்மா நீ தங்கம் என்று கூறுகிறார், இறுதியில் கோபி பாக்கியாவை வீட்டிற்கு கூப்பிடும் நிகழ்வு நடக்கிறது இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்தது.