ராதிகாவை திருட்டு தனமாக சந்தித்து அசிங்கப்பட்ட கோபி.! பாக்கியலக்ஷ்மி சீரியல் இன்றைய எபிசோட்.

baakiya-lakshmi-18
baakiya-lakshmi-18

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் அனைத்து நாடகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறக் கூடியதாக அமைந்திருக்கும் அந்த வகையில் அமைந்ததுதான் பாக்கியலட்சுமி, இந்த நாடகம் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நாடகம் ஒரு குடும்பப் பெண் தனது கணவனின் தவறான செயல்களால் கஷ்டப்படும் நிலையை மக்களுக்கு எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

இந்த நாடகத்தில் வரும் கோபி தனது மனைவி பாக்கியாவிற்கு துரோகம் செய்து மற்றொரு பெண்ணுடன் தகாத உறவில் உள்ளார்,இவர் இப்படி உள்ளார் என்பதை அறிந்த பாக்கியா, தன்னுடைய கணவனும் தன்னுடைய நெருங்கிய தோழியும் எனக்கு துரோகம் செய்து விட்டார்களே என்ற மிகப்பெரிய மனக்கவலையில் உள்ளார்.கோபியுடன் தகாத உறவில் இருக்கும் பெண் ராதிகா இவர் பாக்கியாவிற்கு நெருங்கிய தோழியாவார்.

இதனால் பாக்கியா தனது வீட்டை விட்டு வெளியே சென்று வேறொரு வீட்டில் வசிக்கிறார் அவரை அழைக்க சென்ற கோபியின் அப்பாவிடம்,பாக்கியா “உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தால் இப்படியா செய்வீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார். இதைக் கேட்ட கோபியின் தந்தை அதாவது பாக்யாவின் மாமனார் அந்த இடத்தை விட்டு செல்கிறார். இவ்வளவு பிரச்சனைக்கு இடையில் கோபி எப்படியாவது ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து விட வேண்டும் என்றும் இதற்காக பாக்கியாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவிலும் உறுதியாக உள்ளார்.

மேலும் இந்த பிரச்சனைக்கு இடையில் கோபி தனது கள்ளக்காதலியான ராதிகாவை சென்று சந்திக்கிறார், அவரிடம் அலைபாயுதே மாதவனை போல் பேசி, அவரது மனதை மாற்றி தன் பக்கம் ஈர்ப்பதில் வல்லமையாக உள்ளார். இவ்வாறு சென்று கொண்டிருக்க ராதிகாவும் ஒரு விஷயத்தில் உறுதியாக உள்ளார் அது என்னவென்றால் ராதிகாவிற்கு கோபியின் மனைவி பாக்யா என்று நன்கு தெரியும், ஆகையால் தன்னுடைய தோழி பாக்கியாவிற்கு நான் துரோகம் செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்‌.

கோபி தன்னுடைய ஆசை வார்த்தைகளை கூறி ராதிகாவை அமைதிப்படுத்துகிறார் மேலும் இந்த பிரச்சினையை தற்காலிகமாக முடித்து விட வேண்டும் என்று பாக்கியாவையும் சந்திக்க விரும்புகிறார் அதன் பிறகு பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து உள்ளார்.