விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி தொடர்ந்தே டிஆர்பி-யில் சன் டிவியின் சீரியல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அனைத்து சீரியல்களையும் ஓவர் டேக் செய்து பாக்கியலட்சுமி சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது .மேலும் இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருப்பதுதான் சமீப காலங்களாக ராதிகா மற்றும் கோபி பற்றிய உறவு பாக்கியாவிற்கு தெரிய வந்துள்ள நிலையில் தற்போது வீட்டை விட்டு வெளியேறி குடோனில் இருந்து வருகிறார்.
பிறகு அனைவரும் பாக்யாவை வீட்டிற்கு அழைத்தும் என்னால் இதற்கு மேல் அந்த வீட்டிற்கு வர முடியாது எனக் கூறி வருகிறார். இப்படிப்பட்ட நேரத்தில் கோபியின் அம்மா பாக்யா இந்த வீட்டிற்கு வந்தால் மட்டும் தான் உன்னை சும்மா விடுவேன் இல்லையென்றால் என்னுடைய இன்னொரு முகத்தை பார்க்க வேண்டும் என கூறிய மிரட்டி வருகிறார்.
இப்படிப்பட்ட நேரத்தில் பாக்யாவும் ராதிகாவை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு செல்கிறார் மேலும் இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட பாக்யாவிற்கு வில்லியாக ராதிகா மாற வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் கோபி என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து வந்த நிலையில் ராதிகா சமாதானமான பிறகு பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் தற்பொழுது பாக்கியாவை எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவோம் என கூறிவிட்டு இரவில் பாக்கியவை வைத்து வருவதற்காக போகிறார்.
அங்கு வீட்டிற்கு வா நம் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் எனக் கூற உங்களை மீண்டும் நான் எப்படி நம்புவது எனக் கூற பிறகு சத்தியம் கேட்கிறார் நீ மட்டும் இருந்தால் போதும் ராதிகா எனக் கூறியதும் பாக்யா இப்ப கூட ராதிகாவின் பெயர் தான் வருகிறது என அதிர்ச்சியடைகிறார் மேலும் இதனை தெரிந்து கொண்ட கோபியும் அதிர்ச்சியடைய இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.