அதிர்ச்சி மேல அதிர்ச்சி தரும் ஈஸ்வரி.! என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடும் கோபி..

baakiya-lakshmi-serial-2
baakiya-lakshmi-serial-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் பாக்யாவை பேசி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஈஸ்வரி பாக்யா இருக்கும் ஆபீசுக்கு செல்கிறார். பிறகு பாக்கியா நான் எப்படி அந்த வீட்டிற்கு வருவது திரும்பத் திரும்ப எதையோ சொல்றதனால உங்களை மதிக்காமல் போறேன் மட்டும் நினைச்சுடாதீங்க என கூறுகிறார்.

பிறகு ராதிகா ஊருக்கு கிளம்பலாம் என்று நினைத்த நிலையில் மயூராவுக்கு காய்ச்சல் குறையாமல் அதிகமாக இருந்து வரும் நிலையில் ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் அவளுக்கு உடம்பு முதலில் சரியாகட்டும் பிறகு ஊருக்கு போவதை பார்த்துக் கொள்ளலாம் என கூடி விடுகின்றனர்.

பிறகு வீட்டிற்கு வந்த ஈஸ்வரி தனது கணவரிடம் பாக்யாவேனா எவ்வளவு கூப்பிட்டும் அவள் வரவில்லை என சொல்லி மிகவும் வருத்தப்படுகிறார் அதற்கு வேணுகோபால் அதிகமாக காயப்பட்டு இருக்கா சரியானவுடன் வருவாள் எனக் கூறுகிறார். அந்த நேரத்தில் மாடியில் இருந்து கோபி கீழே வர செழியன் அவரை அழைத்து பாட்டி போய் அம்மாவை கூப்பிட்டாங்க ஆனா அவங்க வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க அதனால பாட்டி அம்மா மேல கோவமா இருக்காங்க எனக்கு கூறுகிறார்.

இது ஈஸ்வரியின் காயில் விழ நான் பாக்கியம் மேல கோவமா இருக்கேன்னு சொன்னனா என சத்தம் போடுகிறார். பிறகு இப்படி ஒரு விஷயத்தை செஞ்சுட்டு உன்னால் எப்படி இந்த வீட்ல நடமாட முடியுது எங்க முகத்தை எப்படி பார்க்க முடியும் என கோபியை பார்த்து கேள்வி கேட்கிறார். இப்ப பாக்கியம் மட்டும் வரனா இந்த விஷயம் அவங்க அம்மா வீட்டுக்கு தெரிஞ்சு அவங்க வந்து உன்னை நிக்க வச்சு கேள்வி கேப்பாங்க என்ன பதில் சொல்லப் போறேன் என கேட்கிறார்.

அதன் பிறகு ஜெனியோட வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சா அவங்க வந்து விசாரிப்பாங்க மருமகளை வச்சுக்கிட்டு செய்ற வேலை கேப்பாங்க சொந்தக்காரர்களுக்கு தெரிந்த என்ன பதில் சொல்வது இது எல்லாம் யோசிக்காமல் இப்படி பண்ணிட்டு நிக்குற என்ன திட்டுகிறார். உனக்கு உன்னுடைய சந்தோஷம்தான் முக்கியம் இல்லனா கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு நாங்க எல்லாம் கிளம்பி விடுகிறோம் எனக் கூற பிறகு செத்தா கூட எங்க முகத்துல முழிக்காத என கூறியதும் கோபி அதிர்ச்சியடைகிறார்.

பாக்கியம் மட்டும் இங்க வீட்டுக்கு வரலாமா உன்ன நான் சும்மா விடமாட்டேன் இப்ப கூட அவ இந்த வீட்டுக்கு வரவானு ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் இருக்கிறேன் என ஈஸ்வரி கூற கோபி ஈஸ்வரியை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார் இதுதான் இன்றைய ஒளிபரப்பாக இருக்கிறது.