விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது கோபி மற்றும் ராதிகாவை உறவைப் பற்றிய பாக்கியாவிற்கு தெரிய வந்துள்ள நிலையில் பாக்கியா அனைத்து உண்மையான தகவலைகளையும் குடும்பத்தின் முன்பே தெரிய வைத்துவிட்டேன் தற்பொழுது அந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் ஒட்டுமொத்த குடும்பமே கோபியின் மீது கோபத்தில் இருந்து வரும் நிலையில் கோபி தனது குடும்பத்தில் இருப்பவர்கள் என்னால் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதில் மன வருத்தத்தில் கண்கலங்கி வருகிறார். கோபியை சந்தித்து இனிய அனைவரும் வருத்தமாக பேசிய நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ராதிகாவை சந்தித்த பாக்கியா ராதிகாவிடம் நீங்களும் எனக்கு துரோகம் செஞ்சிட்டீங்களா எனக் கூறுகிறார் அதற்கு உங்கள் குடும்பத்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது தற்போது தான் தெரிய வந்தது அதிலிருந்து கோபியிடம் பேசவில்லை இதன் காரணமாகத்தான் வெளியூர் எதற்காக முடிவெடுத்தேன் என்று கூறுகிறார்.
இரவில் எனக்கு அம்மா வேண்டும் என புலம்பி வந்த இனியாவிடம் ஜெனி கண்டிப்பாக அம்மா வந்துடுவாங்க நீ கவலைப்படாத என்று கூறுகிறார் அடுத்த நாள் எழில் வீட்டிற்கு வர அவரிடம் ஈஸ்வரி பாக்யாவை பற்றி விசாரிக்கிறார். அம்மா எந்த முடிவு எடுத்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும் என கூற ஈஸ்வரி எப்படியா இருந்தாலும் அவ இங்கு தான் வந்தாக வேண்டும் உன் கல்யாணத்துக்கு கோபியுடன் சேர்ந்து தானே வேண்டும் எனக் கூறுகிறார்.
இதற்கு எழில் அம்மாவை பார்த்தால் அவர் இங்கு வருவார் என எனக்கு தோணவில்லை. பிறகு இனியா அண்ணன் சொல்வதை பார்த்தால் எனக்கு பயமாயிருக்கு என்று கூறிவிட்டு ஜெனியை அழைத்துக்கொண்டு பாக்யாவை பார்ப்பதற்காக செல்கிறார். பாக்கியாவிடம் நீ இல்லாம வீடு நல்லாவே இல்லமா,இனிமே உன்கிட்ட சண்டை போட மாட்டேன், என் ரூம்ல தூங்காதன்னு சொல்ல மாட்டேன், நீ என்ன வேணாலும் என்கிட்ட கேள்வி கேளு ஆனா என் கூட வந்துடுமா என கூறி அழுகிறார்.
அதற்கு பாக்கியா இல்லை இனிமேல் நான் வரவா இல்ல அங்கு அனைவரும் இருக்காங்க அவங்க கூட இரு அங்கு வந்து நான் யாருக்கும் பாரமாக இருக்கலாம் என்று கூறி இனியவை வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகிறார் பிறகு வீட்டிற்கு வந்தவுடன் இனியா எனக்காகவாவது அவங்க வீட்டிற்கு வந்திருக்க வேண்டும் என வருத்தப்படுகிறார் இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.