விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது கோபி எழிலுக்கிடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது.
அது குறித்த எபிசோடுகள் இனிவரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதாவது ஜெயிக்கு தற்பொழுது வளைகாப்பு நடைபெற்ற நிலையில் அதில் கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு ஜெனியின் வளைய காப்பிற்காக பாக்யா தங்கி இருக்கும் வீட்டிற்கு செல்கிறார் அங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் கோபி ராதிகாவை இருக்கும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரிய வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இதனை பார்த்து வருத்தத்துடன் பாக்கியா செல்ல பிறகு இனியாவை அழைத்துப் பேசுகிறார் இதனை பார்த்த கோபி இனியா வா வீட்டிற்கு போகலாம் என பாக்யாவிடம் இனியாவை பேச விடாமல் அழைத்து செல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் அனைவரும் பாக்கியாவை நினைத்து வருத்தப்படும் நிலையில் அந்த நேரத்தில் கொரியர் காரர் ஒருவர் கோபி இருக்கிறாரா என கேட்டு வருகிறார்.
அவரிடம் இங்கு அப்படி யாரும் கிடையாது எனக் கூற பிறகு எழில் வீட்டிற்கு முன்பு கோபியின் பெயர் மாற்றியிருக்கும் பலகையை தூக்கி எறிகிறார் இதனை கோபி பார்க்க மரியாதையாக இதனை எடுத்து மாட்ட வேண்டும் என ரோட்டில் இருவரும் சண்டை போட பிறகு ராமமூர்த்தி சமாதானப்படுத்துகிறார். இவ்வாறு இவர்கள் சண்டை போட்டுக் கொள்வதை அக்கம் பக்கத்தினர்கள் பார்க்கிறார்கள்.
பிறகு வீட்டிற்கு சென்றவுடன் கோபி ராமமூர்த்தியிடம் அவன் எப்படி என்னுடைய பெயரை தூக்கி போடலாம் அந்த வீடு இன்னும் என்னுடைய பெயரில் தான் இருக்கிறது நான் நினைத்தால் அவர்கள் அனைவரையும் வீட்டை விட்டு அனுப்பி விடலாம் மேலும் நான் அங்கு வந்து தங்க முடியும் எனக்கூறி சண்டை போடுகிறார் இவ்வாறு போறப்போக்கை பார்த்தால் கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு பாக்யா தங்கி இருக்கும் வீட்டில் குடிப்போக அதிக வாய்ப்பு இருக்கிறது.