விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலில் தற்பொழுது கண்ணம்மாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதியும் இந்த கிராமத்தில் வசித்து வருகிறார் அங்கு ஏராளமான பிரச்சனைகள் நடந்தாலும் பாரதி நான் கண்ணம்மாவை அழைத்துக் கொண்டுதான் மீண்டும் வீட்டிற்கு செல்வேன் என்ற முடிவில் இருந்து வருகிறார்.
இதனை அடுத்து கண்ணம்மா பாரதியை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் கண்ணம்மாவின் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக பாரதி பல முயற்சிகளை செய்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் கண்ணம்மா அம்மாவின் நினைவு நாளை கொண்டாடி திதி கொடுத்தார். இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் செல்லப்பாண்டியை கண்ணம்மா அனைவரும் முன்பும் அரைந்த நிலையில் பழிவாங்க வேண்டும் என்பதற்காக தற்பொழுது ஒட்டுமொத்த ஊரின் முன்பும் கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி உள்ளார்.
அதாவது கண்ணம்மா மண்டபத்திற்கு சென்று உள்ளிருக்கும் பொருட்களை எடுத்து வருகிறார் இப்பொழுது அங்கிருந்து செல்லப்பாண்டி சட்டையை கழட்டி தோளில் போட்டுக்கொண்டு கண்ணம்மாவுடன் தப்பு செய்தது போல் நாடகம் ஒன்றை நடத்துகிறார் இந்த நேரத்தில் அதனைப் பார்த்துவிட்டு ஊரில் இருப்பவர்கள் அனைவரும் கண்ணம்மாவையும் செல்லப்பாவையும் சேர்த்து வைத்து மிகவும் கேவலமாக பேசுகிறார்கள்.
ஒரு கடைக்கு கண்ணம்மா பொருட்களை எடுத்து போய் தர இதற்கு மேல் உன்னுடைய பொருட்கள் தர வேண்டாம் என கண்ணம்மாவை அனுப்பி வைத்து விடுகிறார்கள். மேலும் அந்த செல்லப்பாண்டியன் புது செட்டப்பு தான் கண்ணம்மா வா என கூறியிருப்பவர்கள். அனைவரும் பேசிக் கொண்டிருக்க பிறகு கண்ணம்மாவின் அப்பா இதனை நினைத்து அழுகிறார்.
மேலும் இந்த தகவல் கண்ணம்மாவிற்கும் தெரியவர பிறகு இவ்வாறு என்னுடைய பெயரை கொடுத்தது யார் என கேட்க செல்லப்பா என கூறுகிறார்கள் உடனே அவரை தேடி கண்ணம்மா வேகமாக செல்கிறார். இது என்னும் பாரதிக்கு தெரியாமல் இருந்துவரும் நிலையில் இதன் மூலம் பாரதி கண்ணம்மாவிற்கு இடையே நெருக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.