ராதிகாவை வெறுத்த கோபி.! அப்பனா இனிமே மூன்றாவது திருமணம் தானா..

baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்பொழுது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீப காலங்களாக தான் அவருக்கு பாக்யாவின் அருமை தெரிகிறது. பாக்யா பண நெருக்கடியில் இருந்து வரும் நிலையில் இந்த நேரத்தில் கூட தன்னுடைய மகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக டியூஷன் சேர்த்துள்ளார்.

அதாவது இனியா கடந்த எக்ஸாமில் மிகவும் குறைவான மதிப்பெண்களை பெற்ற நிலையில் எப்படியாவது நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பாக்கியா டியூஷன் சேர்த்துள்ளார் இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா காலையில் எழுந்தவுடன் வாசப்படியில் நின்று கொண்டிருக்கிறார்.

அப்பொழுது செல்வி பாக்யாவை வீட்டிற்குள் அழைக்க பாக்கியா வர மறுக்கிறார் பிறகு இனியாவை ராமமூர்த்தி டியூஷனுக்கு அழைத்து செல்கிறார். இதனை பார்த்து சந்தோஷப்பட்டு விட்டு செல்வியிடம் எனக்கு செழியன் எழிலை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை ஏனென்றால் அவர்கள் எப்படியாவது வேலைக்கு போய் பிழைத்து விடுவார்கள். அதே போல் இனியாவும் ஒரு நல்ல வேலைக்கு சென்று நல்லபடியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து மறுபுறம் கோபி தன்னுடைய நண்பருடன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அப்பொழுது தன்னிடம் பெரிதாக பணம் இல்லை என்பதை கூற பிறகு பாக்கியா இந்த அளவிற்கு குடும்ப செலவுகளை செய்ய மாட்டார். ஆனால் ராதிகா ஓவரா செலவு செய்றா குடும்ப செலவுக்காக 50000 பணம் கேட்கிறாள் மேலும் அதிகப்படியாக நாங்க ஹோட்டலில் ஆர்டர் பண்ணி தான் சாப்பிடுகிறோம்.

பாக்கியா எவ்வளவோ பரவாயில்லை இருக்கிறத வச்சு அத்தனை வகையான உணவுகளை சூப்பராக செய்தால் என கூறுகிறார் இதனைக் கேட்டவுடன் அவருடைய நண்பர் இவ்வளவு செலவா என அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறு கோபிக்கு இப்பொழுது தான் பாக்யாவின் அருமை தெரியவந்துள்ளது எனவே ராதிகா இனி மேல் மூன்றாவது திருமணத்தைப் பற்றி யோசிக்க வேண்டியது தான்.