கிடைத்த வாய்ப்பும் கைமீறி போனது இடிந்து போய் நிற்கும் எழில்.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் கோபி தன்னுடைய மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பிறகு தொடர்ந்து மிகவும் சுவாரஸ்யமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி .

இப்படிப்பட்ட நிலையில்  பாக்கியா எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார் அந்த வகையில் அவருக்கு கிடைத்திருந்த கேட்டரிங் ஆர்டரை ராதிகா கிடைக்க விடாமல் செய்த நிலையில் இதனால் பாக்யாவிற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவே அந்த பொருட்களை வீணாக்கக்கூடாது என்பதற்காக ரோட்டுக் கடை நடத்த முடிவு செய்துள்ளார்.

இவ்வாறு இது ஒரு புறம் இருக்க மறுபுறம் எழிலுக்கு தெரியாமல் ஈஸ்வரி செழியன் இருவரும் அமீர்தாவின் வீட்டிற்கு சென்று அவருடைய மாமனார் மாமியாரிடம் இதற்கு மேல் அமிர்தா எழிலிடம் பேசக்கூடாது என திட்டவட்டமாக கூடிய நிலையில் அமிர்தாவின் மாமனார், மாமியாரும் யாரிடமும் சொல்லாமல் கிராமத்திற்கு சென்று விடுகிறார்கள். அடுத்த நாள் அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக பாக்கியாவை அழைத்துக் கொண்டு எழில் அவர்களின் வீட்டிற்கு செல்ல அங்கு அவர்கள் இல்லை சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள் என்பது எதில் இருக்கு தெரிகிறது.

எனவே எழில் அவருடைய கிராமத்திற்கு சென்று அமிதாவை தேட பிறகு ஒரு வழியாக கண்டுபிடித்து விடுகிறார் இருவரும் அழுது கொண்டே பேச பிறகு என்ன நடந்தது என்பதை எழில் தெரிந்து கொள்கிறார் அந்த நேரத்தில் பாக்யாவும் போன் செய்து அமிர்தாவிடம் பேச பிறகு அங்கிருந்து எழில் கிளம்புகிறார். சென்னை வந்தவுடன் படத்திற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க வர்ஷினி தன்னுடைய அப்பாவுடன் வருகிறார்.

அப்பொழுது வர்ஷினியின் அப்பா தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என கேட்க அதற்கு எழில் என்னால் அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூற அதற்கு வர்ஷினியின் அப்பா இந்த படத்தை எடுக்க முடியாது இங்கிருந்து கிளம்பலாம் என கூறுகிறார்.

ஒருநாள் டைம் தரேன் யோசிச்சுட்டு சொல்லு என கூற அதற்கு எழில் எனக்கு இந்த வேலை வேண்டாம் உங்களுடைய பொண்ணை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது நான் ஏற்கனவே வேறொரு பெண்ணை காதலித்து வருகிறேன் என கூற வர்ஷினி அதிர்ச்சி அடைகிறார் எனவே இதனைப் பற்றி ஈஸ்வரியிடம் வர்ஷினி கூற இதனால் பெரிய பிரச்சனை ஏற்பட உள்ளது.