+விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது கோபி வீட்டை விற்க முடிவு செய்துள்ள நிலையில் பாக்யா இருவரும் எப்படியாவது பணத்தை தயார் செய்ய வேண்டும் என பல முயற்சிகள் செய்தும் எதுவும் வேலைக்காகவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் கிராமத்திற்கு நிலம் விற்பதற்காக சென்ற நிலையில் அங்கு கோபி செய்த வேலையினால் நிலத்தையும் விற்க முடியவில்லை எனவே தற்போது ஈஸ்வரி, செழியன் இருவரும் எழிலை திட்டி வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். உன்னால் குடும்பமே நடுத்தெருவுக்கு வரப்போகுது இவ்வளவு பிரச்சனையும் உன்னால் தான் என கூறி வருகிறார்கள்.
இதனை அடுத்து பாக்கியா, செல்வி இருவரும் வாக்கிங் போக அங்கு கோபி பாக்கியாவை கிண்டல் செய்கிறார் அதற்கு பாக்கியா நாங்கள் எப்படியாவது வீட்டை வாங்குவோம்.. அப்படி இல்லை என்றால் வீட்டை காலி செய்வோம்.. என கூறிய நிலையில் இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
மறுபுறம் அமிர்தாவை விட்டுவிட்டு வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஈஸ்வரி எழில் காலில் விழுகிறார் இதனால் குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. எழிலுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் வர்ஷினி திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்கிறார். இதனால் பாக்கியா, ஜெனி, ராமமூர்த்தி என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
மேலும் ஏழில் அமிர்தாவை பார்ப்பதற்காக கிராமத்திற்கு சென்று நான் உங்களுடைய வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது என்மேல் தான் எல்லா தவறும் எனக் கூறியவர் பிறகு நடந்த அனைத்தையும் கூறுகிறார். அமிர்தா எழில் கையைப் பிடித்தும் அதனை தள்ளி விட்டு எழில் அங்கிருந்து செல்கிறார். இதன் காரணமாக வர்ஷினி மற்றும் எழிலின் திருமண ஏற்பாடுகள் நடக்க இருக்கிறது அந்த திருமணத்திற்கு வர்ஷினி அமிர்தாவையும் அழைத்துள்ளார் எனவே இது எழிலுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.