அசிங்கப்பட்டும் தன்னுடைய பாட்டியை விட்டுக் கொடுக்காமல் பேசும் எழில்.! உச்சகட்ட கோபத்தில் ராமமூர்த்தி..

pakkiyalaxmi
pakkiyalaxmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது‌. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான டூவிஸ்டுகள் இருந்து வரும் நிலையில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

தற்பொழுது கோபி பாக்கியா, ஈஸ்வரி என அனைவரும் தங்கி இருக்கும் வீட்டை விற்க முடிவெடுத்துள்ள நிலையில் எப்படியாவது அந்த வீட்டை வாங்க வேண்டும் என அனைவரும் முயற்சி செய்து வருகிறார்கள். செழியன் புதியதாக வீடு வாங்கிக் கொண்டு தனியாக தன்னுடைய மனைவியுடன் வாழ இருக்கும் நிலையில் இதனை பற்றி பெரிதாக கவலைப்படாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் எழில் எப்படியாவது தன்னுடைய பட கதையை விட்டு இந்த வீட்டிற்கான தேவையான பணத்தை தயார் செய்து விடலாம் என முயற்சி செய்து வந்த நிலையில் யாரும் எழிலின் கதையை வாங்கிக் கொள்ளவில்லை இந்நிலையில் வர்ஷினி ஈஸ்வரி மற்றும் செழியனை சந்தித்து எழில் தன்னை திருமணம் செய்து கொண்டால் அப்பாவிடம் அந்த பணத்தை வாங்கி தருவதாக கூறுகிறார்.

இதன் காரணமாக செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் வர்ஷினியின் அப்பாவை சந்தித்து பேசுகின்றனர். இவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் எழிலிடம் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சண்டை போடுகின்றனர் ஆனால் எழில் முடியாது என திட்டவட்டமாக கூறி விடுகிறார். இந்நிலையில் எழில் ஜெனியிடம் டீ கேட்க அவரும் டீ போட்டு தருகிறார்.

பிறகு ஜெனி எழிலிடம் இவர்கள் செய்வது சுத்தமாக சரியில்லை எனக்கு பிடிக்கவில்லை என பேச அதற்கு எழில் ஈஸ்வரி, செழியன் இருவரையும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் மறுபுறம் ஊர் பெரியவர் ஒருவரிடம் ராமமூர்த்தி இடம் வாங்குவதற்காக ஆள் அழைத்து வரேன்னு சொன்னிங்களே எங்க என கேட்க ஏன் ராமமூர்த்தி உங்களுடைய மகன் கோபியிடம் சொல்லாமல் இந்த இடத்தை விற்க முடிவு செய்திருக்கிறீர்கள் எனவே அந்த வியாபாரி வேண்டாம் என கூறிவிட்டார் என கூற இதனால் ராமமூர்த்திக்கு மிகவும் கோபம் ஏற்படுகிறது.