அமிர்தாவை விட்டு விட்டு பணத்திற்காக வர்ஷினியை திருமணம் செய்து கொண்ட எழில்.! எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

baakiyalakshi-1
baakiyalakshi-1

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக சன் டிவி சீரியல் தான் டிஆர்பியில் முன்னணி வைத்து வந்த நிலையில் தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் அனைத்து சீரியல்களையும் ஓவர் டேக் செய்து டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருவது தான் அதாவது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வீட்டை விற்கப் போவதாக கூறியுள்ள நிலையில் பணம் புரட்டுவதற்காக பாக்கியா தன்னுடைய மாமனாருடன் கிராமத்திற்கு பூர்வீக சொத்தை விற்பதற்காக சென்றுள்ளார்.

இதனை அடுத்து மறுபுறம் எழிலும் தன்னுடைய பட கதையை விற்க முயற்சி செய்து வரும் நிலையில் எதுவும் எழிலால் பணம் புரட்டவில்லை. இப்படிப்பட்ட நிலையில் வர்ஷினி ஈஸ்வரி மற்றும் செழியனை சந்தித்து எழில் தன்னை திருமணம் செய்து கொண்டால் அந்த பணத்தை நான் அப்பாவிடம் வாங்கி தருவதாகவும் எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணமும் நடந்து விடும் என கூறியிருக்கிறார்.

எனவே எழில் வீட்டிற்கு வந்தவுடன் ஈஸ்வரி எழிலை கூப்பிட்டு வர்ஷினியை திருமணம் செய்து கொண்டால் அவர் பணம் தருவாரு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது எனக் கூற அதற்கு எழில் மறுக்க நீ இதை பண்ணி தான் ஆக வேண்டும் இல்லை என்றால் குடும்பம் நடுத்தெருவில் இருக்கும் என சொல்கிறார். மேலும் எதிர் என்னால் வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க முடியாது என சொல்லி மறுக்க மேலும் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் எழில் வேறு வழி இல்லாமல் வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க இருக்கிறார் எனவே தற்பொழுது எழில் மற்றும் வர்ஷினியின் திருமண எபிசோடுகள் படமாக்கப்பட்ட வருகிறது விரைவில் அந்த எபிசோடுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.