அவனுக்கு அவ்வளவு திமிர் இருந்தா படிக்க வச்ச பணத்தை மீண்டும் தர சொல்லுங்க என ராமமூர்த்தியிடம் கோவப்படும் கோபி.! துணியை காய போட சொல்லும் ராதிகா..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியலில் தற்பொழுது செழியன் மனைவி ஜெனிக்கு வளைகாப்பு நடந்த நிலையில் அங்கு கோபி ராதிகாவை அழைத்துச் செல்கிறார் பிறகு கோபி இரண்டாவது திருமணமானது அனைவருக்கும் தெரிய வர குடும்பத்தினர்கள் அனைவரும் அசிங்கப்படுகிறார்கள்.

பிறகு ஜெனி செழியன் இருவருக்கும் ராதிகா கோபி இருவரும் வாழ்த்துக்களை கூறிவிட்டு தங்களுடைய வீட்டிற்கு செல்கிறார்கள். இந்நிலையில் பாக்யாவின் வீட்டிற்கு கோபியை கேட்டு கொரியர் வந்துள்ள நிலையில் அப்படி என்று யாருமே கிடையாது என எழில் கூற பிறகு அவருடைய பெயர் மாட்டிற்கும் அந்த போர்டை எடுக்க வேண்டும் என எழில் அதனை தூக்கி எரிகிறார். பிறகு கோபியும் இதனை பார்க்க இருவருக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.

வீட்டிற்கு சென்றவுடன் அவனுக்கு இவ்வளவு திமிரா நான் நினைத்தால் அந்த வீட்டில் வந்து என்னால் தாங்க முடியும் அந்த வீடு இன்னும் என்னுடைய பெயரில் தான் இருக்கிறது அவன் ஸ்கூல் படித்தது வளர்ந்தது காலேஜ் படித்தது எல்லாம் என்னுடைய பணத்தில் தான் அவ்வளவு திமிரு இருந்தால் அந்த அனைத்து பணத்தையும் தர சொல்லுங்க என ராமமூர்த்தியிடம் கூற அதற்கு ராமமூர்த்தி பெத்த பையன் கிட்ட இதெல்லாம் கேட்கலாமா என கேட்கிறார்.

பிறகு ராதிகா கோபியை அழைத்துக்கொண்டு ரூமுக்குள் செல்கிறார் இதனை அடுத்து மற்றொரு புறம் பாக்கியா ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் எடுத்திருப்பதாக செல்வியிடம் கூறுகிறார் பிறகு வீட்டிற்கு எடுத்துப் போகுமாறு பாக்கியா கூற அதற்கு செல்வி நான் ஏற்கனவே சமைத்து வைத்துவிட்டு தான் வந்தேன் என பேசிக்கொண்டு இருக்கிறார். பிறகு செல்வி பாக்யாவை பார்த்து வயதாகி விட்டது எனக் கூற எனக்கு வயதாகவில்லை வெறும் 43 வயது தான் தலை முடியில் மட்டும் தான் கலர் பவுடர் அடித்து வருகிறேன் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை கேட்ட ஜெனி பியூட்டி பார்லர் போகலாம் என கூற பிறகு கிளம்புகிறார்கள் இதனை அடுத்து மறுபுறம் ராதிகா கோபியிடம் பியூட்டி பார்லர் போக வேண்டும் அப்ப நான் தான் மூஞ்சி நல்லா இருக்கும் எனவே இன்னைக்கு நைட் எல்லாரும் வெளியில சாப்பிட்டுக்கலாம் என கூறுகிறார். மேலும் வாஷிங் மிஷினில் துணி இருக்கு அதனை காய போடுங்க எனக் கூறியவுடன் கோபி அதிர்ச்சி அடைகிறார் இதனைக் கேட்டு ராமமூர்த்தி சிரிக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.