விஜய் டிவியில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கோபி வீடை விட்டு பாக்கியா, ஏழில் அனைவரையும் வெளியே அனுப்ப இருக்கும் நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் கடுப்பில் இருந்து வருகின்றனர்.
அதாவது இன்றைய எபிசோடில் பாக்கியா எழில், அமிர்தாவிடம் பேசி அவர்களை ரூமிற்குள் அனுப்பி வைக்கிறார். இவர்களும் அம்மா இந்த அளவிற்கு நம்மளுக்கு திருமணம் செய்து வைப்பாங்கன்னு நினைக்கவே இல்லை என பேசிக் கொண்டிருக்க பிறகு ஈஸ்வரி, செழியன், ராமமூர்த்தி என அனைவரும் உட்கார்ந்திருக்கின்றனர். அங்கு எழில் சென்று ஈஸ்வரியிடம் என்னிடம் பேசாமல் உங்களால் இருக்க முடியுமா பாட்டி என கேட்க அதற்கு ஈஸ்வரி திட்டுகிறார்.
மேலும் பெரிய இவன் மாதிரி கோபி கிட்ட சவால் விட்ட உன்னால என்ன பண்ண முடிஞ்சது அவன் சொன்ன கெடு இன்னையோட முடிஞ்சுச்சு நாளைக்கு வந்து அனைவரையும் வீட்டை விட்டு வெளிய அனுப்ப போறான் என்ன பண்ண போற என கேட்க அதற்கு பாக்யா நான் வெளியில் வேறு ஒரு வீட்டை பார்த்து வைத்திருக்கிறேன் அங்கு அனைவரும் செல்லலாம் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
செழியன் நானும் அங்க வரமாட்டேன் எனக் கூற அதற்கு ஜெனி நான் வரேன் ஆன்ட்டி எனக் கூறுகிறார் பிறகு ஈஸ்வரி நாங்க எல்லாரும் அங்க வருண்னு உன்கிட்ட சொன்னோமா என கேட்கிறார். பிறகு செழியன் என்னை நம்பி வீடு பாக்காதீங்க நானும் ஜெனியும் அங்க வர மாட்டோம் என கூற பிறகு ஜெனி மீண்டும் நான் வரேன் ஆன்ட்டி என சொல்ல அதற்கு ஈஸ்வரி நீ அவ கூட வாழ தான் கல்யாணம் செஞ்சுக்கிட்ட மாமியார் பின்னாடி சுத்த இல்லை என கூறுகிறார்.
இவ்வாறு ஈஸ்வரி தொடர்ந்து பாக்கியாவை திட்டி வரும் நிலையில் செழியனும் எந்த ஒரு பண உதவியும் செய்ய முடியாது என கூறி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் கோபி நாளை வந்து கண்டிப்பாக பாக்கியவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப போகிறார் எனவே இதற்கு மேல் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.