விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி தற்பொழுது தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலில் சமீப காலங்களாக எழிலின் திருமண எபிசோட்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் அமிர்தா எழில் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
எனவே எழிலின் மேல் அனைவரும் கோபத்திலிருந்து வருகிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் இதனை எல்லாம் பாக்கியா தான் செய்த காரணத்தினால் பாக்யாவையும் திட்டி வருகின்றனர். திருமணம் முடிந்தவுடன் எழில், அமிர்தா பாக்யாவுடன் வீட்டிற்கு செல்ல அங்கு ஈஸ்வரி இவர்களை வீட்டிற்குள் விட முடியாது என சண்டை போட்டு வருகிறார்.
மேலும் சண்டையின்பொழுது ஈஸ்வரி இந்த திருமணத்திற்காக அனைத்து செலவுகளையும் வர்ஷினியின் அப்பா தான் செய்தார் எனக் கூற அதற்கு ஏழில் இல்ல பாட்டி ஃபர்ஸ்ட் படம் ஹிட்டான பொழுது அவர் எனக்கு நிறைய பணம் தர வேண்டியது இருந்தது சொல்லப்போனால் என்னால் அவருக்கு தான் லாபம் பலமுறை அவரிடம் பணம் கேட்டும் தரவில்லை எனவே அந்த பணத்தை கல்யாண செலவில் கழிச்சிக்கிட்டதாக எனக்கு ஃபோனில் மெசேஜ் செய்தார் அவர் எதையும் லாபம் இல்லாமல் செய்ய மாட்டார் என கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஈஸ்வரியும் அமைதியாகி விடுகிறார் பிறகு ஈஸ்வரி எழிலிடம் உனக்கு உடலில் ஏதாச்சும் கோளாறா இல்ல காலு சரியில்லையா கை சரி இல்லையா நல்லா தானே இருக்க அப்புறம் எதுக்கு இவ்வளவு கல்யாணம் செஞ்ச இவளை எனக்கு சுத்தமா பிடிக்கல எனக் கூற அமிர்தா அழுகிறார்.
பிறகு எழிலும் நான் அமிர்தாவை காதலிக்கிறேன் எனக்கு இவங்கள தான் புடிச்சிருக்கு என சொல்ல ஈஸ்வரி நடிக்காத என கூறுகிறார் இப்படிப்பட்ட நிலையில் ராமமூர்த்தி நீ அமைதியாக இரு இல்லனா வா கிராமத்துக்கு போலாம் எனக் கூற பாக்யா என்ன மாமா இப்படி பேசுறீங்க என சொல்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.