விஜய் டிவியின் டிஆர்பி சமீப காலங்களாக பெருத்த அடியை வாங்கி வருகிறது அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் கயல், எதிர்நீச்சல் போன்ற சீரியல் நம்பர் ஒன் இடத்தை பெற்று வருகிறது எனவே விஜய் டிவியின் பல சீரியல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் டிஆர்பியில் பெரும்பாலும் ஐந்தாவது இடத்தினை பெற்று வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. விஜய் டிவியில் இந்த சீரியலுக்கு மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து அதிரடியான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
அதாவது கோபி வீட்டை விற்க முடிவு செய்துள்ள நிலையில் எப்படியாவது அந்த வீட்டினை வாங்க வேண்டும் என பாக்யா, எழில் இருவரும் போராடி வருகின்றனர் இதனை பார்த்து ராமமூர்த்தி தன்னுடைய பூர்வீக இடத்தை விற்பதற்காக முடிவெடுக்கிறார் ஆனால் கோபியின் தந்திரத்தினால் அந்த இடங்களை விற்க முடியாமல் போகிறது.
இவருடைய பட கதையையும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் வாங்காத காரணத்தினால் பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வரும் நேரத்தில் வர்ஷினியை திருமணம் செய்து கொண்டால் அவருடைய அப்பா தருவதாக கூறுகிறார். எனவே ஈஸ்வரி எழிலின் காலில் விழுந்து வர்ஷணியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கெஞ்சுகிறார்.
அதற்கு எழிலும் ஓகே சொல்ல பிறகு எழில் அமிர்தாவை சந்திப்பதற்காக கிராமம் சென்று நடந்த விஷயங்களை கூறி அழுகிறார். பாக்கியா என்னுடைய வாழ்க்கை போல் எழிலின் வாழ்க்கை ஆகக்கூடாது என கூற அதற்கு ஈஸ்வரி பாக்யாவை அதட்டுகிறார். இதில் எழில் செய்வது என்று தெரியாமல் அமிர்தாவை நினைத்து அழுகிறார்.
இதனை அடுத்து எழிலுக்கு பொண்ணு கேட்டு செல்வதைப் பற்றி செழியன் கோபி ராதிகாரியிடம் சொல்ல கேட்டவுடன் அதிர்ச்சடையார்கள் பிறகு ராதிகா எழிலுக்கு இது ஓகேவா என கேட்கிறார். மேலும் இதனை அடுத்து ராமமூர்த்தி, ஈஸ்வரி மற்றும் செழியன் மூவரும் வர்ஷினியின் அப்பாவை சந்தித்து பேசுகின்றனர். அதற்கு ராமமூர்த்தி எழில் கண்டிப்பாக உங்களுடைய மகளை நன்றாக பார்த்துக் கொள்வார் எனக் கூற அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.