விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் சமீப காலங்களாக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது வெண்பாவை ஆள் வைத்து கடத்திய நிலையில் ஹேமாவை எப்படியோ கண்ணம்மா காப்பாற்றி விட்டார் இப்படிப்பட்ட நிலையில் வெண்பா தற்பொழுது போலீஸிடம் வசமாக சிக்க உள்ளார்.
அதாவது இன்றைய எபிசோடில் போலீஸ் வெண்பாவின் வீட்டிற்கு வந்து நீதான் ஹேமாவை கடத்தினியா என கேட்க வெண் பார்த்து அடைகிறார் பிறகு ஷர்மிளா அப்படியெல்லாம் வெண்பா செய்ய மாட்டா என போலீசிடம் கெஞ்சுகிறார் இருந்தாலும் போலீஸ் வெண்பாவை அரஸ் செய்கிறார்கள். பிறகு இதனால் வெண்பா அலறி அடித்தட்டு எழ பிறகு தான் அவர் கண்டது கனவு என தெரிகிறது.
வெண்பா சத்தம் போட்டதை கேட்டு சாந்தி வர பிறகு தன்னுடைய கனவை பற்றி வெண்பா கூறுகிறார். மேலும் ஹேமாவை கொல்லனும்னு நான் எடுத்த முடிவை மாத்தி இருக்கக் கூடாது என கோபத்தில் பக்கத்தில் இருந்த கண்ணாடி கிளாஸை உடைக்கிறார் இதனால் அவர் கையில் காயம் ஏற்பட்டு கத்த சத்தம் கேட்டு ரோஹித் மற்றும் ஷர்மிளா இருவரும் அங்கு வருகிறார்கள் உடனே அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றன அட்மிட் செய்த பிறகு பதட்டத்துடன் சாந்தி வருகிறார்.
என்ன ஆச்சு எதுக்காக இவ்வளவு பதட்டமா இருக்க என கேட்க அந்த ஹேமாவும் இங்கதான் அட்மிட்டாகி இருக்கா அவ தலையில அடிபட்டு இருக்குது போல என சொல்ல வெண்பா சந்தோஷப்படுகிறாள் அவளை எதுவும் பண்ணலன்னு கவலைப்பட்டேன் ஆனால் மண்டையிலேயே நாலு கொடுத்து இருக்காங்க என மகிழ்ச்சியுடன் கூறுகிறார். ஆனால் சாந்தி வருத்தத்துடன் உங்கள் ராசிக்கு நேரமே சரியில்லன்னு போட்டு இருக்குமா ஜெயிலுக்கு போவீங்கன்னு வேற போட்டு இருக்கு என கூற அதனை கண்டு கொள்ளாமல் வெண்பா உலராதென கூறுகிறார்.
இந்நிலையில் லட்சுமி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னதான் பிரச்சனை பேசாம தாத்தா பாட்டிகிட்ட கேட்கலாம் அவங்க தான் உண்மையை சொல்லுவாங்க என முடிவு செய்து அவர்களிடம் சென்று கேட்கிறாள் எனக்கு என் அப்பா என்னை தூக்கி கொஞ்சம் ஆசையா இருந்தகாதா? எதுக்காக அம்மா ஹேமாவிடம் உண்மையை சொல்ல மாட்டேங்குறாங்க என கேள்வி மேல் கேள்வி கேட்க சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார் மேலும் நீ சின்ன பொண்ணு என அறிவுரை கூறி அனுப்பி வைத்து விடுகிறார்கள் மேலும் இதற்கு மேல் அம்மாவிடமும் இதைப் பற்றி கேட்கக் கூடாது என சத்தியம் வாங்கிக் கொள்கிறார் இதோட இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.