சொந்த ஊருக்கு சென்ற அமிர்தாவின் குடும்பத்தினர்கள்.! வர்ஷினிவுடன் எழிலுக்கு திருமணத்தை பேசி முடித்த ஈஸ்வரி..

baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது ஒருபுறம் பாக்கியா எப்படியாவது கோபியின் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக கேட்டரிங் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் பாக்கியாவிற்கு கிடைக்க இருந்த பெரிய ஆர்டரை ராதிகா கிடைக்க விடாமல் செய்துள்ளார். எனவே இதனால் பாக்கியாவிற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து மற்றொரு புறம் எழில் அமிர்தாவை காதலித்து வரும் நிலையில் எப்படியாவது தன்னுடைய குடும்பத்தினர்கள் சம்பளத்துடன் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்.

எனவே எழில் தன்னுடைய அம்மாவிடம் தன்னுடைய திருமணத்தைப் பற்றி கூறிய நிலையில் ஈஸ்வரி இப்படி ஒரு திருமணம் நடக்கவே நடக்காது என கூறினார். இப்படிப்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் செழியன் ஈஸ்வரி இருவரும் அமிர்தாவின் மாமனார் மாமியாரை சந்தித்து உங்களுடைய மருமகளை என்னுடைய பேரன் தலையில் கட்டி வைக்க பாக்குறீங்களா இப்படி ஒரு திருமணம் நடக்கக்கூடாது இதற்கு மேல் அமிர்தாவை எழிலிடம் பேசக்கூடாது என சொல்லிவிடுங்கள் என கூறி விடுகிறார்கள்.

பிறகு எழில் அமிர்தாவின் மாமனார் மாமியாரை சந்திப்பதற்காக அவர்களுடைய வீட்டிற்கு செல்ல அவர்கள் இதற்கு மேல் இந்த வீட்டிற்கு வரக்கூடாது எனக்கூறி வெளியில் அனுப்பி கதவை சாத்தி விடுகிறார்கள் எனவே அடுத்த நாள் எழில் பாக்கியாவை அழைத்துக் கொண்டு மீண்டும் அமிர்தாவின் வீட்டிற்கு வருகிறார் அங்கு வீடு பூட்டி இருப்பதை பார்த்ததும் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் கேட்க அவர்கள் சொந்த ஊருக்கு போய் விட்டாங்க இதற்கு மேல் அவங்க இங்க வர மாட்டாங்க என கூற எழில் அதிர்ச்சி அடைகிறார்.

மறுபுறம் செழியன் ஈஸ்வரி இருவரும் வர்ஷினியின் அப்பாவை சந்திப்பதற்காக செல்கிறார்கள் அங்கு எழில் நல்ல பையன் தான் எனவே தான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன் என எழில் வர்ஷினி இருவரின் திருமணத்தை குறித்து பேசுகிறார்கள். தற்பொழுது எழிலுக்கு வர்ஷினி உடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற இருக்கிறது.