விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் கோபி தன்னுடைய மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் பாக்கியா கேட்டரிங் தொழில் செய்து வரும் நிலையில் ஹோட்டலில் ஆபிஸரை சந்தித்து எனக்கு ஏதாவது ஆர்டர்கள் கிடைத்தால் தருமாறு கேட்கிறார் மேலும் அந்த ஆபிஸரும் கண்டிப்பாக இதற்கு மேல் உங்களுக்கு நிறைய ஆர்டர் கிடைக்கும் என ஆறுதல் கூறுகிறார். எனவே இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபிக்கு கோபம் வருகிறது.
எனவே கோபி ராதிகாவுடன் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது பாக்கியா அந்த ஆபிஸருடன் சிரித்து சிரித்து பேசுவதை பார்ப்பதை கோபமாக கூறுகிறார் எனவே ராதிகா கோபியை முறைத்துக் கொண்டு பாக்கியா என்ன செய்தால் உங்களுக்கு என்ன என கேட்கிறார் எனவே கோபியும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என கூறி தப்பிக்கிறார்.
இதனையடுத்து எழில் ஆபீஸில் வர்ஷினி எனக்கு என்னமோ நம்ப ரெண்டு பேரும் தான் கல்யாணம் நடக்கும்னு தோணுது நான் எத்தனை முறையோ உங்களிடம் என்னுடைய காதலை கூறிவிட்டேன் என சொல்ல பிறகு அமிர்தாவை பற்றியும் பேசுகிறார் மேலும் இதில் அமிர்தாவை பற்றி பேசக்கூடாது எனக் கூறியிருந்த வர்ஷினி கிளம்புகிறார்.
இதனை அடுத்து எழில் அமிர்தாவின் மாமனார் மாமியாரை பார்ப்பதற்காக செல்ல அங்கு அவர்கள் இதற்கு மேல் இந்த வீட்டிற்கு வரக்கூடாது என வெளியில் அனுப்பி கதவை சாத்துகிறார்கள். இதனால் வீட்டிற்கு சென்ற எழில் பாக்யாவை கட்டி அணைத்து என்னை இதற்கு மேல் அவங்க வீட்டிற்கு வரக்கூடாது என்று சொல்லிட்டாங்க எனக் கூற பாக்கியா அதற்கு நீ ஏன் அங்கு போற என கேட்கிறார் அதன்பிறகு நாளைக்கு அமிர்தாவின் வீட்டில் வந்து நீங்கள் பேச வேண்டும் என கேட்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.