விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு பல பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு படாத பாடுபட்டு வருகிறார் இது மிகவும் சுவாரஸ்யமாக இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் டிஆர்பியிலும் இதன் காரணத்தினால் முன்னணி வகித்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் பாக்கியா இனியாவை திட்டிய நிலையில் இனியா பாக்யாவிடம் சண்டை போட்டுவிட்டு கோபி வீட்டிற்கு வந்துள்ளார். கோபி இதனால் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இனியாவை எப்படியாவது தன்னுடன் இருக்க வைத்த கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார். இந்நிலையில் இனியா பாக்யா வீட்டிற்கு சென்று வந்த நிலையில் இதனால் கோபி கோபப்படுகிறார் உடனே ராதிகா வரை முறைத்துப் பார்க்க இனியவை நான் சென்று கூட்டிக் கொண்டு வருகிறேன் என் மகள் இருக்கும் இடத்தில் நான் தான் இருப்பேன் என சத்தமாக பேசுகிறார்.
இதனால் மயூரா பயப்படுகிறார் மறுபக்கம் இனியா கிளம்புகிறேன் என சொல்லிவிட்டு வருகிறார் பாக்யா, ஈஸ்வரி இனிய போனதை நினைத்து அழுகிறார்கள். வீட்டிற்கு வந்தவுடன் இனியா வந்ததை பார்த்த கோபி எங்கே சென்றாய் நான் கேட்கிறார் அதற்கு டிரஸ் எடுக்க சென்றதாக இனியா கூறுகிறார். பின் ராதிகா கோபியை முறைத்துக் கொண்டு உள்ளே செல்கிறார் ராமமூர்த்தி அதை எல்லாம் பார்க்கிறார் பிறகு அசோசியேசன் மீட்டிங் நடைபெறுகிறது.
அதில் ராமமூர்த்தி பாக்கியா அனைவருக்கும் தெரிய வருகிறது. செகரட்டரி வர அனைவரும் அவரிடம் புகார் தெரிவிக்கின்றனர் ஆனால் செகரட்டரி பொறுப்பில்லாமல் பேசுகிறார் ராமமூர்த்தி அவங்க கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க என்ன சொல்கிறார் பிறகு அவர் என்னால் எல்லா வேலையும் செய்ய முடியவில்லை என சொல்ல உடனே பாக்கியா வேலையை செய்ய முடியவில்லை என்றால் ஆட்களை வைத்து வேலை செய்யுங்கள் என கூறுகிறார்.
மேலும் சம்பளம் கொடுக்க முடியாது என செகரட்டரி சொல்கிறார். இதன் காரணமாக அனைவரும் இந்த முறை பெண்கள் யாராவது நின்றால் தான் சரியாக இருக்கும் என அனைவரும் பேசி கொள்கிறார்கள் அப்பொழுது அனைவரும் யார் செகரட்டரி தேர்தலில் போட்டியிடப் போறீங்க என கேட்க அப்பொழுது செல்வி பாக்கியா அக்கா நிப்பாங்க என கூறுகிறார். பாக்யா வேண்டாம் என சொல்ல மற்ற பெண்கள் அனைவரும் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கின்றனர்.
பழைய செகரட்டரி எல்லாம் இடங்களிலும் சமையல் செய்பவருக்கு என்ன தெரியும் என்ன கேட்க உடனே செல்வி செகரட்டரியிடம் உங்களால் வேலை செய்ய முடியவில்லை என்ன என் அக்கா செய்வார் என சொல்கிறாள் பிறகு ராமமூர்த்தியும் ஆதரவளிக்க பாக்யா தேர்தலில் கண்டிப்பாக நிற்பதாக சொல்கின்றனர்.