வீடு தேடி சென்று அமிர்தாவின் மாமனார், மாமியாரை அசிங்கப்படுத்திய ஈஸ்வரி.! காதலிக்காக ஏங்கும் எழில்..

baakiya-lakshmi
baakiya-lakshmi

விஜய் டிவியில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்த அடுத்தடுத்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது ஒரு பக்கம் பாக்கியா ராதிகாவின் சண்டை போய்க் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் எழில் அமிர்தாவை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் ஈஸ்வரி தன்னுடைய வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் செழியன் உடன் இணைந்து எழிலின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதாவது தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் எபிசோடில் பாக்கியா நடந்த செக்கரட்டரி தேர்தலில் ராதிகாவை விட பல மடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ராதிகா கோபி இருவரும் அசிங்கப்பட்டுள்ளனர் எனவே எப்படியாவது பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் ராதிகாவிற்கு தோன்றுகிறது. அப்பொழுது தன்னுடைய ஆபீஸ்க்கு கேட்டரிங் தொடங்கலாம் என வந்த பாக்யாவை தன்னுடைய ஆபிஸரிடம் கூறி எப்படியோ கேட்டரிங் தொழிலை ஆரம்பிக்க விடாமல் செய்துவிட்டார்.

மேலும் இதனால் பாக்யாவை ஈஸ்வரி, செழியன் திட்டி வருகிறார்கள் மேலும் இதனை தெரிந்து கொண்ட ராமமூர்த்தி ராதிகாவிடம் இதனை போய் கேட்க அதற்கு கோபி ராதிகா இருவரும் திமிராக பேசுகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் பாக்கியா வருத்தத்தில் இருக்கிறார் இது ஒரு புறம் இருக்க மறுபுறம் எழில் மிகவும் சோகமாக இருப்பதை பார்த்த ஈஸ்வரி, செழியன் எழிலின் காதலைப் பற்றி பேசுகிறார்.

அப்போது செழியன் அவன் இப்பொழுது கூட அமிர்தாவை தான் திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்துள்ளான் அதனைப் பற்றிய என்னிடமும் கூறினான் என கூற இதனை இப்படி விடக்கூடாது என எழிலின் பாட்டி ஈஸ்வரி செழியனை அழைத்துக் கொண்டு அமிர்தாவின் வீட்டிற்கு செல்கிறார் அங்கு அமிர்தாவின் மாமனார் மாமியார் இருவரும் அமர்ந்திருக்கும் நிலையில் இருவரும் ஈஸ்வரியை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

பிறகு எழில் தம்பி அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் எனக் கூற அவன் சொன்னான் அது நடக்கணுமா அந்த திருமணம் நடக்காது எழிலிடம் அமிர்தாவை பேசக்கூடாது என சொல்லுங்கள் உங்களுடைய மருமகளை என்னுடைய பேரன் தலையில் கட்டி வைக்கலாம் என்று பார்க்கிறீர்களா என கூற உடனே அதிர்ச்சி அடைகிறார்கள் இதோடு இந்த எபிசோடு நிறைவடைகிறது.