விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா கோபி இருவரும் பாக்கியாவின் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் பாக்யாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்.
எனவே இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகாவை கோபி ரூமிற்குள் அழைத்து நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம் எப்படி இங்கே இருக்க முடியும் என கூற அதற்கு ராதிகா நம்ம மட்டும் இங்க இருக்கலனா நான் தற்கொலை செய்து கொள்வேன் அதுவும் உங்க பெயர் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் அனைவர் பெயரையும் எழுதி வைத்து விட்டு தான் சாவுவேன் எனக் கூறிய மிரட்டுகிறார்.
பிறகு வேறு வழி இல்லாமல் அனைவரிடமும் நானும் ராதிகாவும் இங்குதான் இருப்போம் என கூறுகின்றனர். இதன் காரணத்தினால் ஈஸ்வரி, செழியன், எழில் என அனைவரும் அவங்களை அழைச்சுக்கிட்டு வீட்டிற்கு போங்க என கூறி சண்டை போட இந்த நேரத்தில் ராதிகா போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்வதாக கூறுகிறார்.
மேலும் இந்த வீட்டில் உரிமையுடன் நானும் கோபியும் இருப்போம் என ராதிகா கூற அதற்கு பாக்யா உங்களுக்கு என்ன உரிமை இருக்கு இந்த வீட்டிற்காக ஒரு விலை சொன்னாரு அதற்கு தேவையான பணத்தை கட்டிக்கிட்டு வரேன் இன்னும் 18 லட்சம் தான் தர வேண்டியது இருக்க எனக் கூறுகிறார் அதற்கு ராதிகா உங்களுக்கு என்ன உரிமை இருக்கு உங்கள விவாகரத்து செஞ்சிட்டாரு நீங்க வீட்டை விட்டு போங்க என கூறுகிறார்.
அப்பொழுது கோபி இன்னும் மீதி பணம் தர வேண்டியது இருக்குல்ல அதுவரையும் இருப்போம் என கூற உடனே செழியன் அந்த பணத்தை உடனே நான் தருவதாக கூற அப்பனா இந்த வீட்டை விட்டு கிளம்பி விட்டீர்களா என கேட்கிறார். இவ்வாறு அனைவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்க ராதிகா கோபியை அழைத்துக்கொண்டு ரூமிற்கு சென்று விடுகிறார்.
எனவே அனைவரும் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்து விடலாம் என கூற அதற்கு ஈஸ்வரி வேண்டாம் என சொல்கிறார். மேலும் அமிர்தா இன்னுமா அவர் நம்ம பேர்ல வீட்ட எழுதி தரல இப்ப இருக்கிற நிலைமை பார்த்தா அவர் பணம் தரலன்னு சொன்னாலும் சொல்லுவாரு எனவே போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வேண்டாம் எனக் கூற அதற்கு அனைவரும் ஆமாம் என சம்மதிக்கின்றனர்.
இவ்வாறு இதனை எல்லாம் பார்த்துவிட்டு பாக்கியா ஈஸ்வரியிடம் தான் என்ன பண்ண வேண்டும் என கேட்க அதற்கு ஈஸ்வரி கோபி இங்க இருந்தா குடிக்காம நல்லபடியா இருப்பான் என தான் அழைச்சிட்டு வந்தேன் இவளும் வருவானு நான் எதிர்பார்க்கல இந்த ஜென்மத்துல எனக்கும் அவருக்கும் நீ மட்டும் தான் மருமகள் இவங்கதான் என்னுடைய பேரப்பிள்ளை இந்த வீட்டை விட்டு நீ போகக்கூடாது என எனக்கு சத்தியம் பண்ணு எனக் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் பிறகு பாக்கியா அமைதியாக இருக்க உடனே ஈஸ்வரி பாக்யாவின் கையை எடுத்து தனது தலையில் வைத்து என் மேல சத்தியமா இந்த வீட்டை விட்டு போக கூடாது என கூறுகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறத.