கோபியை வீட்டை விட்டு வெளியே போக சொன்னா அம்மா.! டுவிஸ்ட் மேல டுவிஸ்டா இருக்கே.!

bhakiya lakshmi
bhakiya lakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த நாடகம் டுவிஸ்ட்க்கு மேல் டுவிஸ்டை தருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களுள் பாக்கியலட்சுமி நாடகம் மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒன்று.பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் ஜெயிலில் இருந்த நிலையில், விசாரணைக்குப் பின் ராதிகா கோபியின் உதவியால் வெளியே சென்றார்.

கோபியின் உதவியின்றி பாக்கியா மிகவும் சிரமப்பட்டார் பாக்கியாவை கண்டுகொள்ளாமல் கோபி இருக்க, இறுதியில் பாக்யாவின் மகன்களான செழியனும், எழிலும் பாக்கியாவை வெளியில் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள்.

ராதிகாவின் மகள் மயூவின் பிறந்தநாளை முன்னிட்டு ராதிகா ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு சாப்பாடு செய்து தர வேண்டும் என்று ஆசைப்பட்டு ஆர்டரை பாக்கியாவிடம் தருகிறார்,அங்கு பாக்கியா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டுதான் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் மயங்கி விழுந்தார்கள் என்று அறியப்பட்ட நிலையில் பாக்கியாவை போலீஸ் கைது செய்தது.

ஆனால் தற்போது அது உண்மை அல்ல அங்கு யாரோ குழந்தைகளுக்கு லட்டை உணவாக அளித்து உள்ளனர் அதில் தான் விஷம் இருந்தது என்று எழில் தான் கொண்டுவந்த லேப் ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பாக்கியாவை குற்றவாளி இல்லை என்று நிரூபித்து வெளியே எடுக்கிறார்.

வெளியில் வந்த பாக்கியா தனது இரு மகன்களையும் கட்டி அணைத்தபடி அழுகிறார். தற்பொழுது வெளியான பாக்கியலட்சுமி நாடக தொடரின் ப்ரோமோவில் கோபி பாக்கியாவை வெளியே எடுக்க எவ்வித உதவியும் புரியாததால், கோபத்தின் உச்சிக்கு சென்ற கோபியின் அம்மா கோபியை வீட்டை விட்டு வெளியே செல் என்று கூறுகிறார். இது ரசிகர்களுக்கு டுவிஸ்ட் மேல் டுவிஸ்டாக அமைகிறது.