கோபியும் என்னை ஏமாத்திட்டாரே என்று கதறி அழும் ராதிகா.! இனிவரும் எபிசோட்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து டிஆர்பி யிலும் முன்னிலை சீரியலாக இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அவர்களின் ஆதரவை நன்றாகவே தெரிவித்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து கோபி ராதிகாவிடம் தன்னை யாரும் வீட்டில் கவனிப்பதில்லை. காசுக்காக தான் என் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாரும் என்னை பயன்படுத்துகிறார்கள் என பல பொய்களை சொல்லி தான் ராதிகாவை காதலிக்க வைத்தார். கோபி தற்போது ராதிகாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்ள நேரம் வந்துவிட்டது. ராதிகா பிறந்தநாளுக்கு வந்து சென்ற பிறகு இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறார் கோபி.

இந்நிலையில் கோபி நினைத்த மாதிரியே ராதிகாவும் பிறந்தநாள் விழா முடிந்ததும் கிளம்பி விடுகிறார். ராதிகா வீட்டை விட்டு கிளம்பியதுமே கோபியும் அதைத்தொடர்ந்து ராதிகாவை சந்திக்க செல்கிறார். கோபியும் ராதிகாவும் மிகவும் நெருக்கமாக பேசிக் கொண்டிருப்பதை மூர்த்தி பார்த்துவிடுகிறார். ஆனால் மூர்த்தி யாரையும் தவறாக நினைக்க கூடாது. என்று அதை உறுதி செய்வதற்காக தனமும் மூர்த்தியும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார்கள்.

எனவே, தனமும் மூர்த்தியும் ராதிகாவின் வீட்டிற்கு சென்று உங்களின் வருங்கால கணவரின் போட்டோவை காட்ட முடியுமா என்று கேட்கிறார்கள்.அதற்கு ராதிகாவும் கோபியை காட்டி இவரைதான் திருமணம் செய்யப் போவதாக கூறுகிறார். இதைக்கேட்ட மூர்த்திக்கும் தனத்திற்கும் அதிர்ச்சி ஆகிவிட்டது. இந்த உண்மை பாக்கியவியாவால் தாங்கிக்க முடியாது என்று தனமும் மூர்த்தியும் கவலைப்படுகிறார்கள்.

மேலும், மூர்த்தி கோபியிடம் எதற்காக பாக்யாவின் வாழ்க்கையை கெடுக்கிறீங்க என்று கேட்கிறார். அதற்கு கோபி மூர்த்தியை இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்று திட்டி விடுகிறார். ஆனால் மூர்த்தி இதை அப்படியே விட்டுவிடக்கூடாது என்று ராதிகாவிடம் சென்று பாக்யாவின் கணவர்தான் கோபி என்று எல்லா உண்மையும் கூறியதாகவும் அதற்கு ராதிகா இவரும் நம்மளை ஏமாற்றி விட்டார் என்று மையூ விடம் கூறி அழுவதாகவும் புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து ரசிகர்கள் கோபியின் நிலைமை இனி என்ன ஆகப்போகுது என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.