கேக் வெட்டும் நேரத்தில் என்றி கொடுக்கும் ராதிகா.! விழிபிதுங்கும் கோபி.. வெளிவந்த இன்றைய ப்ரோமோ.

rathika-1
rathika-1

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு மகா சங்கமமாக ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மட்டும் பாக்கியலட்சுமி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நாடகமாகும், தற்பொழுது இந்த நாடகம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நாடகத்தில் கோபி செய்யும் பல செயல்கள் மக்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறது, எஏனென்றால் அந்த அளவிற்கு இவரது முகபாவனைகளை ஒவ்வொரு சுச்சுவேஷன் ஏற்றபடி மாற்றி மாற்றி மிகச் சிறப்பாக நடித்து வருவதால் தற்போது இவரை காமெடி பீஸ் என்றும் அழைத்து வருகிறார்கள்.

இப்படித்தான் நாடகம் ஏதோ இவர் செய்யும் செயல்களால் காமெடியாக சென்றாலும் நாடகத்தில் உள்ள விறுவிறுப்பு எள்ளளவும் குறையவில்லை, ராதிகாவை எப்படியாச்சும் நடக்கவிருந்த பிறந்தநாள் விழாவுக்கு வரவிடாமல் செய்ய என்னென்னவோ முயற்சி செஞ்சார் கோபி ஆனா தற்போது வெளியான அந்த நாடகத்தோட ஒரு சின்ன வீடியோவில் என்ன நடந்தது என்பது தெளிவாக காட்டப்பட்டது.

அது என்னவென்றால் ராதிகா பிறந்தநாள் விழாவிற்கு வருகிறார் அப்போது கோபி அங்கு இருக்கிறார், ராதிகா வீட்டிற்குள்ளே வரும் அந்த தருணத்தில் கோபி வீட்டை விட்டு ஓடி விடுகிறார், கோபி சென்றதும் அனைவரும் தேடி பார்க்கின்றனர். ஆனால் அவர் வரும் முன்பே கேக்கை வெட்டி விட்டனர்.அதன் பிறகு இரவு வீடு திரும்பிய அனைவரும் கோபியிடம் சரியாக ராதிகா வரும் போது மட்டும் எங்கே சென்றீர்கள் என்று கேள்வி கேட்கின்றனர்?

அவரது மகளும், ராதிகா ஆண்டிய பத்தி சொன்னா ஏன் டாடி நீங்க எஸ்கேப்பாகுறீங்க அப்படின்னு கேக்குறாங்க.இப்படிப்பட்ட நிலையில்தான் கோபி செய்யும் ஒவ்வொரு செயலும் காமெடியா இருக்கு அப்படின்னு சொல்லி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் மேலும் என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.