விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நாடகங்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமமாக இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.இந்த நாடகத்தில் கோபி செய்யும் பல செயல்கள் மக்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறது, ஏனென்றால் அந்த அளவிற்கு இவரது முகபாவனைகளை ஒவ்வொரு சுச்சுவேஷன் ஏற்றபடி மாற்றி மாற்றி மிகச் சிறப்பாக நடித்து வருகிறார்.
இப்படி எல்லாம் போயிட்டு இருக்க தற்போது வெளியான இந்த நாடகத்தோட குறுகிய அளவிலான வீடியோவில் கோபி மூர்த்தி இடமும் கதிர் இடமும் எனக்கு பணம் முக்கியம் இல்லை அப்பாவின் சந்தோஷம்தான் முக்கியம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை இந்த விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் ஏனென்றால் இது அப்பாவின் 75வது பிறந்த நாள், அதனால எந்த ஒரு குறையும் இருக்கக் கூடாது என்று கூறுகிறார்.
இப்படி சொல்லிக்கொண்டே இருக்கும்போது டெக்கரேட் பண்ற ஆளு ஒருத்தரு வந்து வீட்டுக்கு வெளியில லைட் போட்டால் அழகா இருக்கும்னு சொல்றாரு அதற்கு கோபி மழுப்பிக்கிட்டே ஏன் வீட்டுக்கு வெளியில அதெல்லாம் ஒன்னும் வேணாம்,இருக்கிறதே போதும் அப்படின்னு சொல்றாரு, மூர்த்தியும் கதிரும் வெளியில லைட் போட்டால் தான் நல்லா இருக்கும் இனிமே இருட்டிவிடும் அப்படின்னு சொல்றாங்க.
ஆனா கோபி அதுக்கு வெளியில லைட் போட்டா பக்கத்துல இருக்குற சொந்தக்காரர்கள் எல்லாம் வீட்டில் ஏதோ பன்ஷன் நடக்குதுன்னு தெரிஞ்சிடும் அதுக்கப்புறம் அவங்க வந்து ஏன் எங்கள கூப்பிடலனு கேள்வி கேப்பாங்க நான் என்ன பண்றது அப்படின்னு சொல்றாரு.
அதுக்கு அவர்களுடைய முக பாவனை என்னடா இந்த ஆள் இப்படி சொல்கிறாரேன்னு சலிப்பா பார்க்கிறார்கள்,கோபி செய்யும் ஒவ்வொரு செயலும் இப்போ காமெடியா இருக்கு அதனால இவரை காமெடி பீசுனே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.