விஜய் தொலைக்காட்சியில் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நாடகங்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மகா சங்கமமாக இரவு 8 மணி அளவில் ஒளிபரப்பப்படுகிறது.இந்த இரு நாடகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் ஒவ்வொன்றின் கதையும் மக்களை வெகுவாக கவரக் கூடியதாக அமைந்துள்ளது.
கோபியின் நண்பர் ஒருவர் கோபிக்கு கால் செய்து நீ உண்மையை ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அசிங்கப்பட்டுவாய் நீ உண்மையை ஒத்துக்கொள் என்கிறார், ஆனால் அதற்கு கோபி என்னால் ராதிகாவை பிரிய இயலாது அவள் எனக்கு வேண்டும் இதற்காக நான் கண்டிப்பாக இந்த பிறந்தநாள் விழாவை தடுத்து நிறுத்துவேன் என்று கதிரின் காதில் விழும்படி கத்தி கூறிய நிலையில்.
தற்போது வெளியான குறுகிய அளவிலான வீடியோவில் கோபி ராதிகாவிடம் சென்று எனக்கு உடம்பு சரியில்லை நான் இன்னைக்கு ஈவினிங் என் பிரண்டு கூட டாக்டர பாக்க போற அப்படின்னு ரொம்ப சோர்வா செம்மையா நடிச்சுகிட்டு சொல்றாரு. அதற்கு ராதிகா நான் நாளைக்கா இருந்த வந்திருப்பேன் ஆனா இன்னைக்கு பிறந்தநாள் விழா இருக்கு அப்படின்னு சொல்றாங்க, அதற்கு உடனே கோபி பரவால்ல நீ போ அப்படின்னு சொல்றாரு.
ஆனா ராதிகா நீங்க இன்னிக்கு தனியா போயிருந்தா நான் உங்க கூட வந்திருப்பேன் நீங்க உங்க பிரண்டு கூட போறதுனால நீங்க போங்க அப்படின்னு சொல்றாங்க அதுக்கு கோபி இவ அங்க போய் நான் தனியா இருக்கனுமா, தேவையில்லாம பிரண்ட உள்ளிழுத்துடியே கோபி அப்படின்னு வாய்க்குள்ளேயே சொல்லுகிறார் கோபி, இந்த வீடியோ இதோட முடிவடைந்தது மேலும் இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஐஸ்வர்யா நான் பாட்டுப் பாடுகிறேன் என்று கூறிவிட்டு மிகவும் கேவலமாக பாட அனைவரும் சிரிக்கின்றனர் பிறகு மீனா நான் பாடுகிறேன் என்று கூறி பாடுகிறாள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இனியா மீனாவை தாத்தா கேக் கட் பண்ணும் பொழுது இந்த பாடலை பாடுங்கள் என்று கூறுகிறாள் இவரைத் தொடர்ந்து ஜீவாவும் ஆமா இந்த பாடலை பாடு என்று கூற மீனா மிகவும் பெருமைப் படுகிறாள். மேலும் ஐஸ்வர்யா மற்றும் மீனா இருவரும் சண்டை போட்டுக் கொள்வது போல் பேசி வருகிறார்கள்