விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி யில் முன்னிலை சீரியலாக இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள். ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் விஜய் டெலிவிஷனில் பாக்யலட்சுமி சீரியலுக்கு அதிக விருது கிடைத்தது.
இதைத்தொடர்ந்து கோபி செய்துவரும் செயல்கள் எதுவும் சரியில்லை என்று அதை நினைத்து பாக்கியா மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். எந்த வேலையையும் சரியாக செய்யாமல் தடுமாறுகிறார் பாக்கியா அதற்கு அவருடைய மாமனார் பாக்கியம் விடம் உனக்கும் கோபிக்கும் ஏதும் பிரச்சினையா என்று கேள்வி கேட்கிறார். பிரச்சனை எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து தன் மாமனாரிடம் கோபி சரியில்லை என்று கூறுகிறார்.
இதன்பிறகு பாக்கியாவிற்கு ஆறுதலாக பேசுகிறார். பாக்கியாவின் மாமனார் அதைத்தொடர்ந்து ஜெனிகும் ஈஸ்வரிக்கும் காபி கொடுப்பதற்காக செல்கிறார். அப்பொழுது காபியில் சர்க்கரை போட மறந்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்த ஜெனி பாக்கியவிற்கு அறிவுரை கூறுகிறார் இனி எல்லாம் நல்லதாக நடக்கும் நீங்க எதுக்கும் கவலைப் பட வேண்டாம் என்று ஜெனி கூறுகிறார். பாக்கியாவிற்க்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லா உண்மையும் தெரிய வருகிறது.
இந்தப் பக்கம் ராதிகா குழப்பத்துடன் கோபிக்கு விவாகரத்து வாங்கி கொடுக்கும் வக்கீலை பார்த்து கோபியின் மனைவிக்கு இதில் சம்மதமா என்று கேட்கிறார். அதற்கு அந்த வக்கீலும் ஆமாம் என்று கூறுகிறார். இதன்பிறகு ராதிகாவிற்கு போன் செய்து எப்படி இருக்கீங்க பிரச்சனை எல்லாம் சரியாகி விட்டதா என்று கேட்க அதற்கு பாக்கியா எதுவும் சரியாகவில்லை என்ன நடக்குது என்று புரியவில்லை என்று வருத்தத்துடன் பேசுகிறார். இதைக்கேட்ட ராதிகா கண்கலங்கி போனை வைத்து விடுகிறார்.
எனவே, மயூ சரியாக சாப்பிடாததால் ராதிகா பால் எடுத்துக்கொண்டு மயூவிடம் என்ன பிரச்சினை என்று கேட்கிறார். அதற்கு மயூ கோபி அங்கிள் ரொம்ப நல்லவங்க எனக்கு பிடித்ததெல்லாம் வாங்கி தருவார் என்று கோபியை பற்றி பேசுகிறார். அதற்கு ராதிகா இனி அவரைப் பற்றி பேச வேண்டாம் என்று கோபப்படுகிறார். கோபி வசமாக மாட்டிக் கொண்டார் கோபி என்று ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து இனி என்ன நடக்கப்போவது என்பதை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.