விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் 400 எபிசோடுகளை தாண்டியும் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கூட சளிப்படையாக சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஏராளமான டுவிஸ்டுகள் மற்றும் பல மாற்றங்கள் என மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் சுசித்ரா,சதீஷ்குமார், திவ்யா சுரேஷ் மற்றும் ரேஷ்மா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தனது மனைவிக்கு துரோகம் செய்யும் கோபி மறைமுகமாகத் தனது கல்லூரி காதலியுடன் வாழ்ந்து வருகிறான்.
கோபி மற்றும் ராதிகா இவர்களைப் பற்றிய பிரச்சனைகள் வீட்டில் தெரிய வந்தாலும் எதனையாவது சொல்லி சமாளித்து அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வருகிறான். ஒரு கட்டத்திற்கு பிறகு ராதிகாவிற்கு கோபியின் மீது சந்தேகம் வந்ததால் உங்கள் குடும்பத்தை பார்த்தாக வேண்டும் என மிகவும் பிடிவாதமாக இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் குடித்துவிட்டு வந்து ராதிகாவிடம் பாக்யாவின் போட்டோவை காட்டி இவர் தான் என்னுடைய மனைவி என அனைத்து உண்மைகளையும் உடைத்தார். நாட்டை சேர்க்க துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறி தற்போது வரையிலும் கோபி வேண்டாம் என்று கூறி ராதிகா அழுதுகொண்டே இருக்கிறாள்.
இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது கோபியை பாக்கியா நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இந்த பேப்பர் உங்களுக்காய் தானே இருந்தது இது என்ன என்று கேட்டார். மேலும் இது பிளவுஸ் தச்ச பில் மற்றும் புடவை ஆகியவை உங்கள் காரில் இருந்தது என்னை ஏமாற்றிய பிரியர்களாக என்று பிடிவாதமாக கேட்டு வருகிறார் கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்து வருகிறான்.