என்ன செய்வது என்று தெரியாமல் நடுரோட்டில் நிற்கும் கோபி.! வீட்டை விட்டு வெளியே அனுப்பிய ராதிகா..

bhakiyalakshmi-serial
bhakiyalakshmi-serial

மிகவும் விறுவிறுப்பாக பல சுவாரஸ்யங்களுடன் ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி.  இந்த சீரியல் தனது அப்பாவி மனைவியை எப்படி எல்லாம் தந்திரமாக கணவன் ஏமாற்றுகிறான் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

பொதுவாக விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீயல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

தனது 25 வருட மனைவியை விவகாரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார் கோபி இதனால் டிவோர்ஸ் வரையும் சென்றுள்ள கோபி பாக்கியா தான் தனது மனைவி என்பதை மறைத்து ராதிகாவிடம் பழகி வந்தான்.

எனவே பாக்கியா மற்றும் ராதிகாவை பிரிப்பதற்காக பல முயற்சிகளை செய்து வந்த நிலையில் சமீபத்தில் பாக்கிதான் கோபியின் மனைவி என்பது ராதிகாவிற்கு தெரியவந்தது.  எனவே கோபியை மிகவும் வெறுக்க இதற்குமேல் என் வீட்டிற்கு வராதீங்க என்று கூறி மிகவும் ஆத்திரத்தில் இருந்து வருகிறார் ராதிகா.

இவ்வாறு ராதிகா சொன்னாலும் கோபி அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார் மேலும் அந்த கோபத்தை பாக்யாவின் மீது காட்டி வருகிறான். இப்படிப்பட்ட நிலையில் இன்று ராதிகாவை பார்ப்பதற்காக மீண்டும் வீட்டிற்கு செல்ல அங்கு வீட்டை விட்டு வெளியே போங்க என்று ராதிகா கூற கோபி போக முடியாது உனக்காக என் குடும்பத்தை விட்டுவிட்டு வர நான் முடிவெடுத்து விட்டேன் என்னால் வாழ முடியாது என்று கத்துகிறான் பிறகு ராதிகாவின் மகள் வெளியே வந்து கோபியை பார்த்து நீங்களும் எங்க அப்பாவைப் போல் சண்டை போடாதீர்கள் என்று கூற கோபி வீட்டை விட்டு வெளியே போகிறான்.