பாக்கியாவிற்காக கோபியை விட்டு மும்பை செல்லும் ராதிகா.! டுடே எபிசோட்.

baakiya-lakshmi-24
baakiya-lakshmi-24

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான காலத்திலிருந்து தற்போது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணியில் இருந்து வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் தற்பொழுது பாக்கியா எப்படியாவது கோபி பேசிக் கொண்டிருப்பது யார் என்பதை தெரிய வேண்டும் என்பதற்காக கோபி இல்லாத நேரத்தில் அவரின் போனை எடுத்துப் பார்க்கிறார்.  திடீரென்று அதனை கோபி பார்த்துவிட உன்கிட்ட எத்தனை முறை என் போன் ஏன் எடுக்கல இனிமே எடுத்தினா என மிருகமா தான் பார்ப்ப என்று கூறி திட்டுகிறான்.

அதன்பிறகு கோபி மற்றும் ராதிகா இருவரும் போலீசில் திருமணம் செய்து கொள்வதாக கடிதம் எழுதி கையெழுத்து போட்டுவிட்டு வந்துள்ளார்கள்.  இந்நிலையில் எப்படியாவது கோபியும் தனது அம்மா ராதிகாவும் ஒன்று சேர வேண்டுமென மையூ நினைத்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ரோமோவில் ராதிகா பாக்கியாவை கோவிலில் சந்திக்குமாறு அழைக்கிறார்.  பிறகு ராதிகாவிடம் உங்கள் வீட்டில் நடந்து கொண்டிருந்த பிரச்சினை முடிந்து விட்டதா என்று கூற அது முடிந்ததா இல்லையா என எனக்கே தெரியலை என்று கூறுகிறார் பாக்கியா.

பிறகு கவலைப்படாதீங்க டீச்சர் இனிமே உங்க வீட்டில் எந்த பிரச்சினையும் நடக்காது என்று கூறுகிறார்.  அதன் பிறகு நான் மும்மைக்கு போக போற ஆபீசில் சொல்லிருக்கேன் கூடிய சீக்கிரம் டிரான்ஸ்பர் தருவதாக கூறியுள்ளார் என்று ராதிகா கூற பாக்கியா அழுகிறார்.