போலீஸ் ஸ்டேஷனில் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக லெட்டர் எழுதி தந்த கோவில்.! மயூ சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கியா..

baakiya-lakshmi-211.
baakiya-lakshmi-211.

ராதிகாவின் மீது ராஜேஷ் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ள நிலையில் போலீசார் காரில் ராதிகாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக ராதிகா அவருடைய அண்ணன் மற்றும் அம்மா ஆகிய இருவருடன் ஸ்டேஷனுக்கு செல்கிறார்.  விசாரித்த நிலையில் கோபியர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கிறார்கள்.

கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அங்கு நானும் ராதிகாவும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம் எனக்கு அடுத்த மாதம் விவாகரத்து கிடைத்து விடும் அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்.  மயூராவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்று கூறிவிட்டு மயூரிக்கு போன் போட்டு பேசுகிறார்கள்.

போனின் மையூரி கோபியிடம் மிகவும் அக்கறையாக அம்மாவை எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுங்க இந்த ரெண்டு பேரும் பேசுங்க.  உங்க கிட்ட பேசாம எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா.  வீட்டுக்கு வாங்க என பேச இதனைக்கேட்ட போலீஸ் ராஜேஷ் மீதுதான் தவறு இருப்பதை புரிந்து கொள்கின்றனர்.

பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என லெட்டர் எழுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு கிளம்புமாறு போலீசார் கூறுகிறார்கள். இதனை கேட்ட ராதிகா அதிர்ச்சியடைகிறார். கோபி கண்டிப்பாக நான் எழுதி தருகிறேன் என்று கூறிவிட்டு லெட்டர் எழுதி தருகிறார்.

பிறகு பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார் அந்த மயூரி தனியாக அழுது கொண்டே இருக்கிறார். பாக்கியாவிடம் மையூரி அப்பா அம்மா மீது போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாரு எனவே அம்மா, பாட்டி, மாமா என மூன்று பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இருக்கிறார்கள்.  என்று கூற இதனை கேட்டு அதிர்ச்சியடைகிறார் பாக்கியா இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.