ராதிகாவை அரெஸ்ட் செய்ய வந்த போலீசார்கள்.! இதற்கெல்லாம் காரணம் கோபி தான்..

baakiya-lakshmi-18
baakiya-lakshmi-18

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் 400 எபிசோடுகளை தாண்டியும் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கூட சளிப்படையாக சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஏராளமான டுவிஸ்டுகள் மற்றும் பல மாற்றங்கள் என மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் சுசித்ரா,சதீஷ்குமார், திவ்யா சுரேஷ் மற்றும் ரேஷ்மா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தனது மனைவிக்கு துரோகம் செய்யும் கோபி மறைமுகமாகத் தனது கல்லூரி காதலியுடன் வாழ்ந்து வருகிறான்.

இப்படிப்பட்ட நிலையில் கோபியின் மனைவி பாக்கியாதான் என்பதை தெரிந்து கொண்ட ராதிகா கோபியை தனது வீட்டிற்கு விடாமல் இருந்து வருகிறார்.  மேலும் கோபிக்கும் ராதிகாவின் முன்னாள் கணவருக்கும் இடையே ஏற்கனவே ஒருமுறை பிரச்சினையான நிலையில் தற்போது மீண்டும் கோபி ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார்.

அவ்வப்பொழுது மையூரி நீங்கள் எப்படியாவது அம்மாவின் மனதை மாற்ருங்க நாம மூணு பேரும் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறுகிறார்.  இதனைப் பார்த்த ராதிகா கோபியை பார்த்து எங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா ஏன் என்னை இப்படி நான் படிக்கிறீர்கள் என்று கூறுகிறார்.

இதனைப் பார்த்த ராதிகாவின் முன்னாள் கணவர் வந்து கோபியிடம் சண்டை போட கோபி கீழே தள்ளி விடுகிறார்.  உடனே ராதிகாவின் முன்னாள் கணவர் ராதிகாவின் மீது போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் கொடுத்துள்ளார்.  ராதிகாவை அரெஸ்ட் செய்வதற்காக போலீசார்கள் வீட்டிற்கு வந்துள்ளார்.