ராதிகாவின் முன்னாள் கணவரை அடித்து தள்ளிய கோபி.! இதனைப் பார்த்துவிட்டு பாக்கியாவிடம் போய் கூறிய செல்வி..

gobi-rathika-1
gobi-rathika-1

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமீப காலங்களாக இந்த சீரியலில் பாக்கியா தான் கோபியின் மனைவி என்பது தெரியாமல் இருந்து வந்த ராதிகாவிற்கு சமீபத்தில் கோபியின் குடும்பத்தைப் பற்றித் தெரிய ராதிகா நாட்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன் என்றும் கோபி எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்ற கோபத்திலும் ராதிகா இருந்து வருகிறார்.

இவ்வாறு கோபி பலமுறை ராதிகாவிடம் பேச முயற்சி செய்தாலும் ராதிகா நீங்க இனிமே என் வீட்டுக்கு வராதீங்க என் மகள்ட பேசாதீங்க என்று கூறி வருகிறார். மேலும் கோபிக்கு ராதிகாவின் வீட்டிற்கு போக ராதிகா கோபி வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டு விடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ள எபிசோடில் கோபி ராதிகாவின் வீட்டிற்கு செல்ல ராதிகாவிற்கு தெரியாமல் மையூவிடம் பேசி வருகிறார். மையூ எப்படியாவது நீங்கள் அம்மாவின் மனதை மாற்றி விடுங்கள் நாம மூணு பேரும் ஒன்றாக ஜாலியாக இருக்கலாம்.  அம்மா உங்களிடம் பேசுனா திட்றாங்க,  அடிக்கிறாங்க நான போறேன் என்று கூறுகிறார்.

பிறகு ராதிகா வந்து ஏன் கோபி என்ன நோகடிக்கிறீங்க இனிமே வராதீங்க வீட்டை விட்டு போங்க என்று கூறுகிறார்.  இதனை பார்த்துவிட்டு ராதிகாவின் முன்னாள் கணவர் கோபியிடம் சண்டை போட கோபி அவரை அடித்து தள்ளி  விடுகிறார். இதனைப் பார்த்த செல்வி இதேபோல் ஏதோ பிரச்சனை என்று பாக்கியாவிடம் கூறுகிறார். இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கின்றது.