விஜய் டிவியில் பல சுவாரசியமான கதைகளுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வரும் நிலையில் தற்போது ராதிகாவின் மனதை எப்படி மாற்றி தனது குடும்பத்திற்கு தெரியாமல் திருமணம் செய்யப்போகிறார் கோபி என்பதை மையமாக வைத்து எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது இனியா குடும்பத்தினர்களுடன் பிக்னிக் போகலாம் என முடிவு செய்துள்ளார்கள். இனியா உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது கோபி வர அப்பா பிக்னிக் போலமா என்று கேட்க டடிக்கு நிறைய வேலை இருக்கு மா நீங்க போயிட்டு வாங்க நான் இன்னொரு தடவை வர என்று கூறுகிறார்.உடனே கோபமடைந்த இனியா நீங்க எப்போதும் இப்படி தான் சொல்றீங்க. அப்படிதான் எழில் அண்ணனின் படத்தைப் பார்ப்பதற்காக தியேட்டருக்கு அழைத்து போறனு சொன்னீங்க ஆனா அடிச்சுக்கிட்டே போல என்று கூறினார்.
பிறகு இனியா உங்களுக்கு என் மேல பாசமே இல்ல அப்பா என்று கூற கோபி அப்படி எல்லாம் இல்லாமா எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் நான் உன்ன பத்தி தான் நினைச்சுகிட்டு இருக்க என்று கூறுகிறார். மேலும் உங்களுக்கு அப்படி என்னதான் பிரச்சனை பிசினஸ்ல பிரச்சனை இருந்தால் வேற பிசினஸை மாத்துங்க என்று கூற கோபி என்ன சொல்வதென்று தெரியாமல் அப்படியே அமைதியாக இருக்கிறான்.
இன்னொரு புறம் மயூரி ராதிகாவிடம் எனக்கு கோபி அங்கில் தான் வேணும் நான் என் ஸ்கூல் பிரண்ட்ஸ்ட எல்லார்கிட்டயும் நீங்களும் கோபி அங்கிலும் கல்யாணம் பண்ணிக்க போறீங்க என்ன சொல்லி இருந்தேன் இப்பொழுது கேட்கும் போது உங்களுக்கு இடையே சண்டை என்று சொன்னதும் எல்லாரும் என்னை பார்த்து சிரிக்கிறார்கள் என்று கூறி வருத்தப்படுகிறார் இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.