விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் கோபிக்கும் மட்டும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். 25 வருடமாக தனது மனைவியுடன் வாழ்ந்து விட்டு தற்போது தனது கல்லூரி காதலிக்காக தனது குடும்பத்தை வேண்டாம் என்று கூறியும் பாக்கியாவை விவாகரத்து செய்ய முயற்சி செய்தும் வருகிறார் கோபி.
இப்படிப்பட்ட நிலையில் டீச்சரான் கோபியின் மனைவி என்பது தெரியாமல் இருந்து வந்த ராதிகா சமீபத்தில்தான் கோபியின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்டார். டீச்சர் மிகவும் நல்லவர் அவருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என ராதிகா கோபியை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.
மேலும் கோபி பல முயற்சிகள் செய்தாலும் கோபியிடம் பேசாமல் இருந்து வரும் நிலையில் மையூரி கோபி அங்கிள் தான் மிகவும் நல்லவர் எனக்கு தேவையான அனைத்தையும் வாங்கி தருவார் எனக்கு வேண்டும் என கூறி வருகிறார். மையூவை தொடர்ந்து ராதிகாவின் அம்மாவும் ராதிகா மற்றும் கோபிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றார்.
மேலும் ராதிகாவின் அம்மா ராதிகாவின் மனதை மாற்றுவதற்காக திறந்து பேசி வரும் நிலையில் தற்பொழுது கோபி மீண்டும் ராதிகாவின் வீட்டிற்கு வர ராதிகா கோபியை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி விடுகிறார். இதனைப் பார்த்த ராதிகாவின் முன்னாள் கணவர் ராதிகா வீட்டைவிட்டு கோபி தள்ளி விடும் பொழுது எதுக்குமே உங்க வீட்ல இரண்டு முறை சொல்லிட்ட இப்பவா மறுபடியும் சொல்கிறேன் என்று கூறிவிட்டு பாக்கியா உட்பட குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிய வைத்து விடுகிறார்.