கோபிக்கு உதவி செய்யும் ராதிகாவின் அம்மா.! ரூமில் அழுதுகொண்டே இருக்கும் ராதிகா..

rathika-gobi
rathika-gobi

ஒரு குடும்பத் தலைவியின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. ஒரு கணவன் தனது 25 வருட மனைவியை எப்படியெல்லாம் ஏமாற்றி தந்திரமாக தனது கல்லூரி காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக திட்டம் தீட்டுகிறான் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு பல மாதங்களாக பாக்கியாவை பற்றி ராதிகாவிற்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ராதிகாவிற்கும் கோபியின் மனைவி பாக்கியா என்பது தெரியவந்துள்ளது. எனவே கோபியை வெறுக்க என் வீட்டில் பக்கமே வராதீங்க என்று கூறிவருகிறார்.

இன்னொருபுறம் பாக்கியா காரில் இருந்த புடவை மற்றும் பிளவுஸ் பில் அவற்றை பார்த்து விட்டு யாருக்காக இந்த புடவையை எடுத்தீங்க என்று கேட்டு வருகிறார். எப்படியோ இதனை சமாளிக்க விடுகிறான் கோபி. பிறகு பாக்கியா உங்களுக்கு அதிகமாக வேல இருக்கும் தான் அதுக்குனு பாதி நேரத்தில் கூடவா கால் பண்ணுவாங்க என்று கேட்க.

நான் பார்க்கிற வேலை அப்படி பாக்கியா என்று கோபி கூறுகிறான். மேலும் அதுக்குன்னு வேலை செய்றவுங்களிடம் டார்லிங், செல்லம் இப்படி எல்லாம் பேசுவாங்க என்று கூற கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்து வருகிறான்.

பிறகு ராதிகாவின் வீட்டிற்கு செல்ல ராதிகா அம்மா ஏன் ராதிகாகிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டு முன்பே சொல்லி இருக்கலாம் இல்ல என்று கூற கோபி ராதிகாவுடன் பெஸ்ட் பிரண்ட் தான் என்னோட மனைவி பாக்கியா என்பதை மட்டும் நான் மறைச்சேன் மத்தபடி ராதிகா மற்றும் மையூரியை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று கூறுகிறார்.

உடனே இதனைக் கேட்டு வந்த ராதிகா ரூமில் இருந்து வெளிவந்து நீங்கள் இப்போது இந்த வீட்டை விட்டு போறீங்களா இல்ல நான் போட்டா என்று கூற உடனே கோபி நானே போய் விடுகிறேன் என்று கூறி விட்டு வீட்டிற்கு செல்கிறான்.இவ்வாறு இதனை எல்லாம் பார்த்தால் கோபிக்கு இதற்குமேல் ராதிகாவின் அம்மாதான் உதவி செய்ய போகிறார் என்று தெரியவருகிறது.