விஜய் டிவியில் தற்பொழுது பல பிரச்சினைகளுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் விவகாரத்தானதற்கு பிறகு கோபி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் மேலும் ராதிகாவின் வீட்டிற்கு சென்று தன்னை சேர்த்துக் கொள்ளுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடுரோட்டில் காரிலேயே தங்கி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் பாக்யா செய்த திமிருத்தனத்தால்தான் கோபி வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என அவருடைய குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் திட்டி வருகிறார்கள் மேலும் பாக்யா சமைத்து வைத்திருந்த சாப்பாட்டை யாரும் சாப்பிடாமல் இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் கோபிக்கு அடுத்ததாக இந்த வீட்டின் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு மூத்த மகன் சொழியன் க்ஷ குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என கோவியை நாம் ஈஸ்வரி கூறுகிறார்.
உடனே செழியன் தனக்கும் எனது மனைவிக்கும் ஆகும் செலவை மட்டுமே மாதம் வீட்டிற்கு கொடுக்க முடியும் அதை தவிர வேறு எந்த பணமும் என்னால் செலவழிக்க முடியாது என கோபியை விட மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறார். இதனை பார்க்கும் பொழுது பாக்கியம் உடைந்து போய்விடுகிறார் மேலும் குடும்பக் செலவை ஏற்க மறுக்கும் மகனிடம் 10 பைசா கூட வாங்க கூடாது என்ற முடிவில் பாக்கியா இருந்து வருகிறார்.
மேலும் கேட்டரிங் தொழில் மூலம் தன்னுடைய பணத்தை சம்பாதிக்கலாம் என தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் ஏனென்றால் இன்னும் ஒரு வருடத்திற்குள் கோபியிடம் 40 லட்சம் ரூபாய் தர வேண்டும் என சவால் விட்டதாலும் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இளைய மகன் எழிலின் உதவியுடன் கேட்டரிங் தொழிலில் ஈடுபட இருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் ராதிகாவின் வீட்டிற்கு பாக்கியா குடும்பத்தில் இருப்பவர்கள் வரிசையாக செல்ல அனைவரையும் அவமானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி விடுகிறார் ராதிகா. இதன் காரணமாக கோபியை மன்னித்து ராதிகா ஏற்றுக் கொள்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் இவர்கள் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ போகின்றனர் இப்படிப்பட்ட நிலையில் குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் ராதிகா இனி வரும் நாட்களில் பாக்யாவிற்கு கொடூர வில்லியாக மாற வாய்ப்பு இருக்கிறது.