ஒட்டுமொத்த குடும்பத்து முன்பு உண்மையை போட்டு உடைத்த பாக்யா.! அதற்கு ஈஸ்வரி சொன்ன பதில்..

baakiya-lakshmi-8
baakiya-lakshmi-8

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. டிஆர்பியில் டாப் சீரியலாக இடம் பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருவதால் இந்த சீரியல் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் ரசித்து வந்தார்கள். விஜய் டெலிவிஷனில் பல விருதுகளும் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கோபி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் பாக்கியா கோபியை தடுத்து நம் வீட்டிற்கு வந்து சண்டை போட்டது யார் என்று கேட்கிறார் அதற்கு ஈஸ்வரி இப்போது எதுவும் பேச வேண்டாம் என்று கூறியும் அதை கேட்காமல் பாக்கியா இங்கே வந்து சண்டை போட்டது யார் என்று கேட்கிறார் கோபி பாக்யாவுக்கு ஏதோ உண்மை தெரிந்து விட்டது என்று பதட்டத்தில் முழிக்கிறார். பாக்கியா எழிலிடம் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் உங்க அப்பா என்று கூறுகிறார்.

மேலும் கோபி எனக்கு என்ன தெரியும் என்று கேட்கிறார் அப்போ உங்களுக்கு மருத்துவமனையில் பில் கட்டியது யார் என்று தெரியாது பாக்கியா கேட்க அதற்கு கோபி நான் மயக்கத்தில் இருந்தேன் எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறுகிறார். நான் பில் கட்டிருந்தால் உங்களை வந்து பார்க்காமல் இருக்க மாட்டேன். உங்கள் மனைவிதான் பில் கட்டியது என்று செழியன் கூற அதற்கு பாக்கியா மனைவிதான் என்று சொன்னார்கள் மனைவி பெயர் சொல்லவில்லையே அப்போ பில் கட்டிய மனைவி யார் என்று கேட்கிறார்.

இதைத் தொடர்ந்து பாக்கியா நான் மருத்துவமனைக்கு சென்ற போது என்னை உள்ளே விடவில்லை அப்போது மருத்துவமனையில் ஏதாவது பில் கட்ட வேண்டுமா என்று கேட்டபோது ஏற்கனவே கட்டி விட்டார்கள் என்று கூறிய போது கோபியை பார்க்கலாம் என்று போனால் அங்கே வேறு ஒருவருடன் மனைவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். வேற யாரும் இருக்க வாய்ப்பில்லை என்று கோபி கூற எல்லாம் முடிந்து விட்டது என் வாழ்க்கையில் எது நடக்க கூடாதோ அது எல்லாம் நடந்து விட்டது என்று புலம்புகிறார் பாக்கியா.

எனவே அங்கே மருத்துவமனையில் நீ இல்லாமல் நான் செத்துருவேன் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு நாளாக அவருக்கு உடம்பு சரியில்லை என்று நினைத்தோம் ஆனால் இவரை விட்டு அவங்க பிரிந்து விடுவார்கள் என்ற பயத்திலே இருந்திருக்கிறார். இதையெல்லாம் நம்ப முடியாது என்று ஈஸ்வரி கூற அதற்கு எழில் இதெல்லாம் உண்மை என்று கூறுகிறார் . கையும் களவுமாக மாட்டிக் கொண்ட கோபி இதன் பிறகு கோபியின் நிலமை என்ன ஆகும் என்று ரசிகர் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.