கோபியை வீட்டிற்குள் விடாமல் கேள்வி கேட்கும் பாக்யா.! அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்

baakiya-lakshmi-today-7
baakiya-lakshmi-today-7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  ராதிகா மும்பைக்கு போக நினைத்த நிலையில் அவரை பார்ப்பதற்காக போய் கோபிக்கு ஆக்சிடென்ட்டாகி உள்ளது. மேலும் மருத்துவமனையில் ராதிகா கோபியின் மனைவி என கூறி அட்மிட் செய்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலை கோபி ராதிகாவிடம் நீ இல்லையென்றால் நான் செத்து விடுவேன் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாக்கியா அதனை கேட்டு விடுகிறார். பிறகு கோபியை பார்க்காமலேயே மருத்துவமனையில் இருந்து ரோட்டில் நனைந்து கொண்டே வீட்டிற்கு வருகிறார்.

வீட்டிற்கு வந்ததும் சாப்பிடாமல் கூட நின்று கொண்டிருக்கிறார் அனைவரும் சாப்பிட என்று கூறினாலும் எதனையும் கண்டுகொள்ளாமல் நான் பார்த்துகிறேன் என்று கூறுகிறார். அனைவரும் பாக்யா மருத்துவமனைக்கு போகவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே ஜெனி ஆன்ட்டி நாங்க இப்பதான் மருத்துவமனையில் இருந்து வந்தோம் அங்கிள்க்கு ஒன்னும் ஒன்னும் பிரச்சனை இல்லை தற்பொழுது பாட்டியும் எழிலும் அங்கிளுடன் தான் இருக்கிறார்கள் என்று கூறுகிறார். மேலும்  சாந்தி அக்கா வந்ததிலிருந்து இப்படியே தான் இருக்காங்க என்று கூறுகிறார்.

பிறகு ஜெனி என்னாச்சு ஆன்ட்டி என கேட்க நீங்க இருவரும் சென்று தூங்குங்கள் என்று கூறுகிறார். பிறகு நீங்களும் தூங்குங்கள் என்று கூறிவிட்டு சாந்தி மற்றும் ஜெனி இருவரும் தூங்க செல்கிறார்கள். ஆனால் பாக்யா விடியும் வரையிலும் தூங்காமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறார்.

பிறகு கோபியை மருத்துவமனையில் இருந்து ஈஸ்வரி மற்றும் எழில் இருவரும் அழைத்து வருகிறார்கள். வீட்டிற்குள் போகும் கோபியை தனது கையை வைத்து தடுக்கிறார் பாக்கியா. அனைவரும் பாக்யாவிடம் கேள்வி கேட்டோம் எதுவும் வாய்ப்பு இருக்காமல் இருந்து வருகிறார் பிறகு அங்கு வந்த இவருடைய மனைவி யார் என்று கேளுங்கள் என்று கூறுகிறார்.  கோபி பழுப்பும் படியான பதிலை சொல்லி வருகிறார்.