விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. மேலும் இந்த சீரியலில் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் அனைத்து காட்சிகளும் மிகவும் சுவாரசியமாக இருந்து வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் இவ்வளவு நாளாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் பாக்யாவிற்கு கோபியின் கள்ளக்காதலி ராதிகாதான் என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. கோபி சமீபத்தில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே கோபிக்கு விபத்து நடந்ததை தெரிந்து கொண்ட ராதிகா மருத்துவமனைக்கு வந்து செவிலியர்களிடம் கோபி எங்கே என்று கேட்ட பிறகு நான் அவருடைய மனைவி என்று கூறுகிறார். பிறகு ராதிகா கோபியை சந்தித்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து இதனை அறிந்த பாக்யாவும் மருத்துவமனைக்கு வர செவிலியர்களிடம் கோபி எங்கே கோபி அவர் என்னுடைய கணவர் என்று கேட்க இதற்கு முன்பு ஒருவர் கோபியின் மனைவி என்று வந்தார். நீங்களும் அவருடைய மனைவி என்று கூறி வரீங்க என்று கூறுகிறார்கள்.
அதன் பிறகு பாக்கியா கோபியை பார்ப்பதற்காக கதவைத் திறக்கிறார். அப்பொழுது கோபி ராதிகாவின் கையைப் பிடித்துக் கொண்டு,’ என்னை விட்டு சென்று விடாதே, நீ இல்லை என்றால் நான் செத்து விடுவேன், என்ன சென்டிமெண்டாக கூறிவரும் நிலையில் இதனை பாக்யா பார்த்து விடுகிறார்.
கோபியின் மீது பாக்யாவிற்கு சந்தேகம் இருந்தாலும் ராதிகாவுடன் தான் அவர் உறவில் இருந்து வருகிறார் என்பதை தெரியவர பாக்யா அதிர்ச்சியடைந்து விடுகிறார். பிறகு கோபியை பார்க்காமலேயே மருத்துவமனையை விட்டு வெளியில் வந்து மயங்கி விழுந்து விடுகிறார்.
அதன் பிறகு அனைவரும் பாக்கியாவிற்கு தண்ணீர் கொடுத்து எழுப்பி விடுகிறார்கள். பாக்கியா மழையில் நனைந்து கொண்டே மிகவும் சோகத்துடன் நடந்து செல்கிறார். இந்நிலையில் ராதிகா வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் பாக்யாவிற்கு தெரியும் என்பதால் பாக்யா ராதிகாவிற்காக கோபியை விட்டு தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.